காட்சி
kaatsi
பார்வை ; காணல் ; தோற்றம் ; தரிசனம் ; கண்காட்சி ; வியத்தகு காட்சி ; காட்சியளவை ; அறிவு ; தலைமகளைத் தலைமகன் முதலில் காணுதலைக் கூறும் கைக்கிளைத் துறை ; வீரர் வீரபத்தினியர்க்கு ஏற்ற நடுகல்லை ஆராய்ந்து காணும் புறத்துறை ; நடுகல்லை வீரர் தரிசித்தலைக் கூறும் புறத்துறை ; அழகு ; தன்மை ; நூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோட்பாடு. நின்காட்சி யழித்திடுவேன் (நீலகேசி, 494). 1. Doctrine, tenets; நூல். திறவோர் காட்சியிற் றெளிந்தனம் (புறநா. 192). 2. Scripture; தன்மை. கற்குழித்து நெறிசெயுங் காட்சியே (சேதுபு. அவை. 4). 13. Nature ; அழகு. அணங்கு மெய்ந்நின்ற வமைவரு காட்சி (பொரு ந. 20). 12. Beauty ; ஒருபொருளைக் கண்ட இடம். கண்டு நின்றுவந்த காட்சியுமிதுவே (கல்லா. 6, 28). 11. Place, site, where something was once seen or found ; நடுகல்லை வீரர் தரிசித்தலைக்கூறும் புறத்துறை. (தொல். பொ. 60, உரை.) 10. (Puṟap.) Theme describing the actual sight of the memorial stone ; வீரர்வீரபத்தினியர்க்கு ஏற்ற நடுகல்லை ஆராய்ந்து காணும் புறத்துறை. (தொல். பொ. 60: சிலப். 25, அரும்.) 9. (Puṟap.) Theme describing the choice of a suitable stone for a memorial of a warrior, or of a virtuous wife who chose not to survive her deceased husband ; தலைவன் தலைவியை முதன்முதற் காணுதலைக்கூறும் ஒரு கைக்கிளைத்துறை. (பு. வெ. 11, ஆண்பால்.) 8. (Puṟap.) Theme describing the first sight of a maiden by a man who falls in love with her ; அறிவு. மருடீர்ந்த மாசறு காட்சி (குறள், 199). 7. Knowledge ; பிரத்தியட்சப்பிரமாணம். மருளில் காட்சி யைவகையாகும் (மணி. 27, 14). 6. Perception ; அற்புதநிகழ்ச்சி. அஃது ஒரு கண்கொளக் காட்சியாயிருந்தது. Colloq. 5. Attractive object of sight ; . 4. Exhibition, See கண்காட்சி. தரிசனம். எதிரேநின்று காட்சி தந்தருளி (பெரியபு. மெய்ப்பொ. 23). 3. Vision of a deity, sight of a great personage; audience ; தோற்றம். கையென லாயிற்றன்றே... மணியிடன காட்சி (கம்பரா. திருவடி. 82). 2. Form, appearance ; கண்ணுறல். தரும மூர்த்தியைக் காட்சியை யினிக்கடன் (கம்பரா. விபீடண. 19). 1. Sight, view ;
Tamil Lexicon
s. sight, view, vision, பார்வை: 2. an object of sight, visible appearance, தோற்றம்: 3. manifestation of God, தரிசனம்; 4. (logic) evidence of the senses, பிரத்தியக்ஷப்பிரமாணம்: 5. knowledge, அறிவு: 6. beauty, அழகு: 7. nature, தன்மை, காட்சிகொடுக்க, -ஆக, to appear in a vision. காட்சிப்பிரமாணம், perception, means of perception. பிரத்தியட்சப் பிர மாணம். காட்சிப்பொருள், visible concrete things (opp. to கருத்துப்பொருள், abstract things). காணாக்காட்சி, an extraordinary sight or occurrence. பொருள்காட்சிச்சாலை, a museum.
J.P. Fabricius Dictionary
kaacci காச்சி sight, vision; appearance; scene
David W. McAlpin
, [kāṭci] ''s.'' Sight, view, பார்்வை. 2. An object of sight, visible appearance, தோற் றம். 3. The manifestation of a deity or the sight of a great personage, தரிசனம். 4. ''(p.) [in logic.]'' Perception, evidence of the senses, பிரத்தியட்சப்பிரமாணம். 5. Knowledge, intelligence, ascertainment, அறிவு. 6. ''[in erotics.]'' One of the ten அவத்்தை, the first view which a bridegroom has of his bride, விரகாவஸ்தைக்காட்சி. 7. ''(c.)'' Anomaly, a strange event, நூதனக்காட்சி.--''Note.'' In the agama logic, seven species of perception are given, viz.: 1. ஐயக்காட்சி, Indistinct ap prehension, doubt, uncertainty, hesitation. 2. திரிபுக்காட்சி, misapprehension, miscon ception, optical or mental illusion. 3. விகற் பக்காட்சி, discrimination or knowledge to distinguish things one from another in five particulars, viz.: in name, kind, quality, action, and substance. or matter. 4. பொ றிவாயிற்காட்சி, perception of the sences, with the aid of the mental faculties. 5. மனக் காட்சி, or மானதக்காட்சி, ideas formed in the mind of things perceived by the senses. 6. அனுபவக்காட்சி, perception by actual ex perience of the exercise of the affecions towards objects perceived. 7. யோகக்காட்சி, the spiritual perception of the Yoga, or knowledge of events past, present or fu ture, by abstract devotion--''Note. 2d.'' Each of the above has two divisions, one, புறம்- abroad, relating to external or secular affairs; the other, அகம்-at home, to re ligious affairs. கண்ணுக்குக்காட்சிகடவுளுக்குங்காட்சி. What is pleasing to the sight is pleasing to the deity--referring to the ornaments of the temple, rich offerings, &c. கண்ணுள்ளபோதே காட்சி. Gratify your sight while you can.
Miron Winslow
kāṭci
n. காண்-.
1. Sight, view ;
கண்ணுறல். தரும மூர்த்தியைக் காட்சியை யினிக்கடன் (கம்பரா. விபீடண. 19).
2. Form, appearance ;
தோற்றம். கையென லாயிற்றன்றே... மணியிடன காட்சி (கம்பரா. திருவடி. 82).
3. Vision of a deity, sight of a great personage; audience ;
தரிசனம். எதிரேநின்று காட்சி தந்தருளி (பெரியபு. மெய்ப்பொ. 23).
4. Exhibition, See கண்காட்சி.
.
5. Attractive object of sight ;
அற்புதநிகழ்ச்சி. அஃது ஒரு கண்கொளக் காட்சியாயிருந்தது. Colloq.
6. Perception ;
பிரத்தியட்சப்பிரமாணம். மருளில் காட்சி யைவகையாகும் (மணி. 27, 14).
7. Knowledge ;
அறிவு. மருடீர்ந்த மாசறு காட்சி (குறள், 199).
8. (Puṟap.) Theme describing the first sight of a maiden by a man who falls in love with her ;
தலைவன் தலைவியை முதன்முதற் காணுதலைக்கூறும் ஒரு கைக்கிளைத்துறை. (பு. வெ. 11, ஆண்பால்.)
9. (Puṟap.) Theme describing the choice of a suitable stone for a memorial of a warrior, or of a virtuous wife who chose not to survive her deceased husband ;
வீரர்வீரபத்தினியர்க்கு ஏற்ற நடுகல்லை ஆராய்ந்து காணும் புறத்துறை. (தொல். பொ. 60: சிலப். 25, அரும்.)
10. (Puṟap.) Theme describing the actual sight of the memorial stone ;
நடுகல்லை வீரர் தரிசித்தலைக்கூறும் புறத்துறை. (தொல். பொ. 60, உரை.)
11. Place, site, where something was once seen or found ;
ஒருபொருளைக் கண்ட இடம். கண்டு நின்றுவந்த காட்சியுமிதுவே (கல்லா. 6, 28).
12. Beauty ;
அழகு. அணங்கு மெய்ந்நின்ற வமைவரு காட்சி (பொரு ந. 20).
13. Nature ;
தன்மை. கற்குழித்து நெறிசெயுங் காட்சியே (சேதுபு. அவை. 4).
kāṭci
n. காண்-.
1. Doctrine, tenets;
கோட்பாடு. நின்காட்சி யழித்திடுவேன் (நீலகேசி, 494).
2. Scripture;
நூல். திறவோர் காட்சியிற் றெளிந்தனம் (புறநா. 192).
DSAL