Tamil Dictionary 🔍

மேல்

mael


மேலிடம் ; அதிகப்படி ; வானம் ; மேற்கு ; தலை ; தலைமை ; மேன்மை ; உயர்ந்தோர் ; உடம்பு ; இடம் ; மேலெழுந்தவாரியானது ; முன்புள்ளது ; பின்புள்ளது ; அதிகமாக ; முன் ; பற்றி ; அப்பால் ; இனி ; ஒரு முன்னொட்டு ; ஏழனுருபு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன். சிறுபட்டி மேலோர்நாள் (கலித். 51). 2. Before, previously, formerly; மேலிடம். ஓலை . . . தொட்டு மேற்பொறியை நீக்கி (சீவக. 2143). 1. That which is above or over; upper side; surface; அதிகப்படி. 2. Extra; வானம். (சூடா.) 3. Sky; மேற்கு. (பிங்.) 4. West; தலை. மேவா ருயிருணங்க மேன்முடித்த பிள்ளையன் (பு. வெ. 2, 8). 5. Head; தலைமை. மேலதிகாரி. 6. Leadership; superiority; மேன்மை. (பிங்.) 7. Excellence; உயர்ந்தோர். இன்னாமை நோக்கிப் பசைதல் பரியாதா மேல் (நாலடி, 60). 8. The great; உடம்பு. மேலுக்குச் சுகமில்லை. 9. Body; வித்தை. (தக்கயாகப். 545, உரை.) 10. Knowledge; science; இடம். (பிங்.) 11. Place; மேலெழுந்தவாரியானது. 12. That which is superficial; முன்புள்ளது. 13. That which goes before; பின்புள்ளது. --adv. 14. That which comes after; அதிகமாக. (W.) 1. More, more than; பற்றி. சிவபிரான்மேற் பாடிய நூல். 3. About; அப்பால். அங்கே போனதின்மேல் எனக்கெழுது. (W.) 4. Afterwards, subsequently; இனி. (உரி. நி.) --part. 5. Hereafter; ஓர் உபசர்க்கம். (பி. வி. 45, உரை.) 1. A particle meaning on, upon, above, used with verbs; ஏழனுருபு. (தொல். சொல். 82.) 2. Sign of the locative;

Tamil Lexicon


s. the sky, ஆகாயம்; 2. surface, மேற்புறம்; 3. the west, மேற்கு; 4. width, breadth, அகலம்; 5. the 7th case, ஏழனுருபு; 6. (prep.) on, upon, above, மீது. 7. (adv.) more, more than, அதிகம்; 8. before, previous, former, முன்; 9. hereafter, - as a future birth, இனி. தலைக்குமேல், over the head. என் தலை, (தலையின்), மேல், upon my head. இதுக்குமேல், இனிமேல், இனிமேலைக்கு, henceforth, for the fufure. இதுக்குமேல் ஒன்றுமில்லை, nothing can exceed this. பத்துமணிக்குமேல், after ten o'clock. பகைவர் மேற்செல்ல, to go against the enemy. மேலகம், beatifiation, மோட்சம், (a high abode). மேலங்கி, a scarf or mantle. மேலது கீழதாக்க, see கீழ். மேலவர், (sing. மேலவன்) superiors; 2. the celestials. மேலாகிய இன்பம், the happiness of heaven. மேலாமினுக்கி, a woman who trims herself up. மேலாலம், rain, மழை. மேலான, adj. high, superior. மேலான காரியம், a superior thing. மேலானவர், a superior, one higher in rank. மேலிட, to prevail; 2. increase in quantity. 3. to grow as hatred; 4. to overwhelm, (as water). மேலீடு, v. n. prevalence, predominance; 2. superiority in office; 3. a female's ornament for the upper part of the ear. மேலுதடு, the upper lip. மேலும், moreover, besides, further. மேலுமேலும், மேன்மேலும், more and more. மேலுறுதி மேலத்தாட்சி, additional evidence. மேலெழவார, to take off from the top of a heap. மேலெழுச்சி, indifference, superficialness; 2. pride. மேலெழுச்சியாய், மேலெழுந்த வாரி யாய், superficially, carelessly. மேலே, above, over. மேலை, மேலைக்கு, இனிமேலைக்கு, afterwards, in future; 2. the next year. மேலைக்கரை, the west coast (opp. to கீழக்கரை, east coast.) மேலையார், மேலையோர், the exalted, மேலோர். மேலொற்றி, a second mortgage. மேலோங்க, மேலோங்கி விளங்க, to become elevated and known. மேலோர், the great, the exalted; 2. ancestors, ancients; 3. celestials; 4. poets. மேல்கை, further, beyond; 2. higher rank, 3. the west; 4. high lands, மேடு. மேல்சீமை, மேற்சீமை, மேனாடு, the west country. மேல் நோக்க, மேனோக்க, to ascend upward, to tend upward. மேல்மாடி, the upstair room of a palace. மேல்வட்டமாயிருக்க, to be superior, to prevail. மேல்வயிறு, the upper part of the belly. மேல் வாய், the palate, the roof of the mouth. மேல்வாரம், the government's or the landlord's share of the produce. மேல் விசாரணை, superintendence. மேல் விட்டம், the beam supporting the roof of a house. மேல்விலாசம், -விலாசம், a superscription; direction of a letter. மேல்வீடு, an upper-room, an upstair house. மேல் வெள்ளம், fresh rushing current on the swelling of a river. மேற்கடல், the western sea. மேற்கட்டி, a cloth spread beneath the roof of a room to prevent the dust falling, a tarpauling, a canopy, அசுமானகிரி. மேற்கட்டு, an upper-story; 2. an upper garment. மேற்கதி, heaven, பரமபதம். மேற்காவல், மேற்காறுபாறு, superintendence, supervision. மேற்காற்று, the west wind. மேற்கூறை, the roof, thatched roof. மேற்கொதி, feverishness of the body. மேற்கோள், quotation; 2. Saturn, சனி; 3. excellency, மேன்மை; 4. a covering, போர்வை. மேற்சீட்டு, a bill annexed to a writing to authenticate it. மேற் சுவாசம், மேன் மூச்சு, hard breathing as of one dying. மேற்செம்பாலை, a tune pitched on the 7th note. மேற் பக்கம், மேற் புறம், the upper side. 2. the west side. மேற்பட, to exceed, to excel; 2. to preponderate, to predominate; 3. to overcome; 4. to fall upon, to treat harshly. மேற்படி, ditto, above-mentioned. மேற்படி ஊரிலே, in the town abovementioned. மேற்படியான், the man mentioned above. மேற்பரப்பு, மேற்புறம், surface. மேற்பாடம், a writing copy. மேற்பூச்சு, outside-plating. மேற்போட்டுக்கொள்ள, to undertake; 2. (with dat.) to be surety for. மேற்போட்டுக்கொண்டு பேசு, to speak in one's defence. மேற்றரம், the first or best sort. மேற்றரமான சரக்கு, goods of the best sort. மேற்றலம், மேல்தளம், an upper floor, the auxiliary troops. மேன்பாடு, excellency nobleness, see மேம்பாடு under மேம்படு. மேன்மக்கள், great men.

J.P. Fabricius Dictionary


----- west, western

David W. McAlpin


, [mēl] ''s.'' The sky, the visible heavens, வானம். 2. The west, மேற்கு. 3. Width, breadth, அகலம். 4. height, surface, மிசை. 5. ''[a particle of declension.]'' The seventh case or ablative of place, ஏழனுருபு. 6. ''[prep.]'' On, upon, above, மீது. 7. ''adv.'' More, more than அதிகம். 8. Before, pre vious, former, முன். 9. Hereafter--as a future birth, இனி. என்தலைமேல், Upon my head. வீட்டின்மேல். Upon the house. நான்சொன்னதற்குமேலேசெய்தாய். You have done more than I said. அங்கேபோனதின்மேலெனக்கெழுது. Write me, after you have arrived there. அதுக்குமேல்நான்என்னசெய்வேன்.......What shall I do besides, or more? பத்துமணிக்குமேல்வா.....Come after ten O'clock. இனிமேல்என்னசெய்வாய். What will you do in future? மேல்கீழில்லையா. Is there no up and down; no high and low in rank? மேலுக்குச்சௌக்கியமில்லை. I am not in health of body, ''(lit.)'' to the outside. என்மேலொன்றுமில்லை. There is nothing against me. அவனேமேலாயிருக்்கிறான். He stands high. பகைவர்மேற்சென்றான், He went against the enemy.

Miron Winslow


mēl
[T. K. mēlu M. mēl.] n.
1. That which is above or over; upper side; surface;
மேலிடம். ஓலை . . . தொட்டு மேற்பொறியை நீக்கி (சீவக. 2143).

2. Extra;
அதிகப்படி.

3. Sky;
வானம். (சூடா.)

4. West;
மேற்கு. (பிங்.)

5. Head;
தலை. மேவா ருயிருணங்க மேன்முடித்த பிள்ளையன் (பு. வெ. 2, 8).

6. Leadership; superiority;
தலைமை. மேலதிகாரி.

7. Excellence;
மேன்மை. (பிங்.)

8. The great;
உயர்ந்தோர். இன்னாமை நோக்கிப் பசைதல் பரியாதா மேல் (நாலடி, 60).

9. Body;
உடம்பு. மேலுக்குச் சுகமில்லை.

10. Knowledge; science;
வித்தை. (தக்கயாகப். 545, உரை.)

11. Place;
இடம். (பிங்.)

12. That which is superficial;
மேலெழுந்தவாரியானது.

13. That which goes before;
முன்புள்ளது.

14. That which comes after;
பின்புள்ளது. --adv.

1. More, more than;
அதிகமாக. (W.)

2. Before, previously, formerly;
முன். சிறுபட்டி மேலோர்நாள் (கலித். 51).

3. About;
பற்றி. சிவபிரான்மேற் பாடிய நூல்.

4. Afterwards, subsequently;
அப்பால். அங்கே போனதின்மேல் எனக்கெழுது. (W.)

5. Hereafter;
இனி. (உரி. நி.) --part.

1. A particle meaning on, upon, above, used with verbs;
ஓர் உபசர்க்கம். (பி. வி. 45, உரை.)

2. Sign of the locative;
ஏழனுருபு. (தொல். சொல். 82.)

DSAL


மேல் - ஒப்புமை - Similar