Tamil Dictionary 🔍

முதல்

muthal


ஆதி ; இடம் முதலியவற்றில் முதலாயிருப்பது ; காரணம் ; மூலகாரணனான கடவுள் ; முதலானவன் ; ஏற்றம் ; மூலதனம் ; வேர் ; கிழங்கு ; அடிப்பாகம் ; மரம் முதலியவற்றின் அடி ; இடம் ; அகப்பொருட்குரிய நிலம் ; பொழுதுகளின் இயல்பு ; பிண்டப்பொருள் ; செலவுக்காகச் சேமிக்கும் பொருள் ; இசைப்பாட்டுள் ஒன்று ; சொத்தின் கொள்முதல் விலை ; பன்னிரு உயிரெழுத்தும் பதினெட்டு மெய்யெழுத்தும் ; தொடக்கமாகவுடைய ; ஏழாம் வேற்றுமையுருபு ; ஐந்தாம் வேற்றுமையுருபு ; பத்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐந்தாம் வேற்றுமை யுருபு. அது முதல் இது வரை. 2. (Gram.) Termination of the ablative case, meaning 'from henceforth'; ஏழாம் வேற்றுமை யுருபு. (நன். 302.) குணமுதற் றோன்றிய ... மதியின் (மதுரைக். 195). 1. (Gram.) Termination of the locative case; . 20.See முதலான. (W.)- prep. . 19. (Gram). See முதலக்கரம். (நன். 59). --adv. இசைப்பாட்டுள் ஒன்று. (சிலப். 3, 41-2, உரை.) 17. (Mus.) A variety of tune; செலவுக்காகச் சேமிக்கும் பொருள். திருப்பூ மண்டபத்துக்கு முதலாக அளக்கவும் (S. I. I. iii, 215, 11). 16. Stock, store; பிண்டப் பொருள். முதலுஞ் சினையும் (தொல். சொல். 89). 15. Whole, integral thing; . 14. (Akap.) See முதற்பொருள், 2. முதலெனப்படுவது நிலம்பொழு திரண்டி னியல்பென மொழிப தொல். பொ. 4). அடிப்பாகம். வாடிய வள்ளி முதலரிந்தற்று (குறள், 1304). 11. Base, foot, bottom or lowest part of anything; மர முதலியவற்றினடி. வேங்கையைக் கறுவுகொண்டதன் முதற் குத்திய மதயானை (கலித். 38). 12. Stump; lowest part of stem; பத்திரம். இந்த முதல் இற்றைநாள் முதலியான் காட்டுகையில் (S. I. I. v, 90). Document; இடம். சுரன்முதன் மராத்தவரி நிழல் (சிறுபாண். 8). 13. Place; கிழங்கு. 10. Tuber; வேர். முதலினூட்டு நீர் (அரிச். பு. மீட்சி. 17). 9. Root; மூலதனம். முதலிலார்க் கூதியமில்லை (குறள், 449). 8. Principal, fund, capital, money yielding interest; விசேடியம். (சைவப்.) 7. That which is qualified; சிலாக்கியம் அல்லது ஏற்றம். முதன் மாணாக்கன். 6. Best, that which is superior; முதலாவான். முதலாய நல்லானருளல்லால் (திவ். இயற். 1, 5.) 5. One who is first or oldest; மூலக்காரணனான கடவுள். மூவாமுதலாய் நின்ற முதல்வா (திருவாச. 27, 10). 4. God, as the First Cause; காரணம். நோய் முத னாடி (குறள், 948). 3. Cause; இடம் முதலியவற்றில் முதலாயிருப்பது. முதல் நீடும்மே (தொல். எழுத். 458). 2. First, as in rank, place, etc.; ஆதி. முதலூழியிறுதிக்கண். (சிலப். 8, 1, உரை). 1. Beginning; சொத்தின் கொள்முதல்விலை. Colloq. 18. Cost price;

Tamil Lexicon


s. the first, the beginning, ஆதி; 2. stock in trade, the principal, capital; 3. the main stock of a plant; 4. the first, the Supreme Being; 5. etcetera, and so on, and the rest, முதலிய; 6. a sign of the 7th case; 7. (prep.) from. வட்டியும்முதலும், principal and interest. இதுமுதல், இது முதலாய், இது முதற் கொண்டு, from henceforth. முதல் அங்கேபோ, go first there. முதல்வன், முதல்வன், he who is the first. முதலற்றுப்போக, to lose the principal or capital, to be totally extinguished as a family. முதலாய், even, so much. தண்ணீர் முதலாய் இங்கே கிடையாது, there is not even water to be got here. முதலாம் அதிகாரம், the first chapter. முதலாவது, that which is first, first and foremost. முதலான, முதலிய, and other. புலிகள் ஒனாய்கள் முதலான துஷ்ட மிருகங்கள், tigers, wolves and other wild beasts. முதலாளி, a proprietor, a president, a chief, principal. முதலியோர், the remaining persons, and others. முதலே, first, before. முதலோன், முதல்வன், the Deity. முதல் போட, to form or lay out a capital. முதல் முதல், in the very first, at the very outset or beginning, for the first time. முதல்முதல் வாங்க, to take first before the rest. முதல்வர், celestials, தேவர்; 2. sovereigns, kings, அதிபதிகள். முதல்வி, a lady of distinction. முதல் வேதம், the Rig Veda. முதற்காரன், கைமுதற்காரன், a rich man, a capitalist. முதற்பட்சம், the first or best kind or class; 2. for the most part. முதற்பலம், -பலன், the first produce. முதற்பா, a species of verse of different kinds, வெண்பா. முதற்பேறு, the first born; 2. as முதற் பலன். முதற்றரம், the first or best sort; 2. the first time, முதற்றடவை. முதனாள், the first lunar mansion, அச் சுவினி. முதனிலை, (in gram.) the root of a word, பகுதி. முதனூல், a rule of the highest authority; 2. (see under நூல்) an original scientific work regarded as divine, the Vedas. முதனிலைத் தொழிற்பெயர், verbal roots used as verbal nouns. முதன்மை, priority, superiority, supremacy. முதன்மையோர், the chief, the eminent. பறிமுதல், confiscation.

J.P. Fabricius Dictionary


mota(l) மொதல் 1. first, initial 2. beginning, principal (money, Chief- (political) 3. from (with time expressions) [post. + nom.]

David W. McAlpin


, [mutl] ''s.'' The first, the beginning, ஆதி. 2. Stock, principal, fund, capital, money at interest; original cost, பணமுதல். 3. God, Deity, the First, or the Supreme Be ing, கடவுள். 4. Et c&ae;tera, and so on, as முத லிய. 5. The seventh case of nouns, as சுரன்முதல்வந்தஉரன்மாய்மாலை, the strong illu sive darkness that came out of the parched ground. 6. ''[as a preposition.]'' From, henceforth, &c., as இதுமுதல். முதலங்கேபோ. Go first there. வட்டியுமுதலுமிழந்தேன். I have lost princi pal and interest. முதல்கட்டாது. The capital is insufficient. முதலிலார்க்கூதியமில்லை. Those without a capital will be without profit.

Miron Winslow


mutal
n. [K. mudal.]
1. Beginning;
ஆதி. முதலூழியிறுதிக்கண். (சிலப். 8, 1, உரை).

2. First, as in rank, place, etc.;
இடம் முதலியவற்றில் முதலாயிருப்பது. முதல் நீடும்மே (தொல். எழுத். 458).

3. Cause;
காரணம். நோய் முத னாடி (குறள், 948).

4. God, as the First Cause;
மூலக்காரணனான கடவுள். மூவாமுதலாய் நின்ற முதல்வா (திருவாச. 27, 10).

5. One who is first or oldest;
முதலாவான். முதலாய நல்லானருளல்லால் (திவ். இயற். 1, 5.)

6. Best, that which is superior;
சிலாக்கியம் அல்லது ஏற்றம். முதன் மாணாக்கன்.

7. That which is qualified;
விசேடியம். (சைவப்.)

8. Principal, fund, capital, money yielding interest;
மூலதனம். முதலிலார்க் கூதியமில்லை (குறள், 449).

9. Root;
வேர். முதலினூட்டு நீர் (அரிச். பு. மீட்சி. 17).

10. Tuber;
கிழங்கு.

11. Base, foot, bottom or lowest part of anything;
அடிப்பாகம். வாடிய வள்ளி முதலரிந்தற்று (குறள், 1304).

12. Stump; lowest part of stem;
மர முதலியவற்றினடி. வேங்கையைக் கறுவுகொண்டதன் முதற் குத்திய மதயானை (கலித். 38).

13. Place;
இடம். சுரன்முதன் மராத்தவரி நிழல் (சிறுபாண். 8).

14. (Akap.) See முதற்பொருள், 2. முதலெனப்படுவது நிலம்பொழு திரண்டி னியல்பென மொழிப தொல். பொ. 4).
.

15. Whole, integral thing;
பிண்டப் பொருள். முதலுஞ் சினையும் (தொல். சொல். 89).

16. Stock, store;
செலவுக்காகச் சேமிக்கும் பொருள். திருப்பூ மண்டபத்துக்கு முதலாக அளக்கவும் (S. I. I. iii, 215, 11).

17. (Mus.) A variety of tune;
இசைப்பாட்டுள் ஒன்று. (சிலப். 3, 41-2, உரை.)

18. Cost price;
சொத்தின் கொள்முதல்விலை. Colloq.

19. (Gram). See முதலக்கரம். (நன். 59). --adv.
.

20.See முதலான. (W.)- prep.
.

1. (Gram.) Termination of the locative case;
ஏழாம் வேற்றுமை யுருபு. (நன். 302.) குணமுதற் றோன்றிய ... மதியின் (மதுரைக். 195).

2. (Gram.) Termination of the ablative case, meaning 'from henceforth';
ஐந்தாம் வேற்றுமை யுருபு. அது முதல் இது வரை.

mutal
n.
Document;
பத்திரம். இந்த முதல் இற்றைநாள் முதலியான் காட்டுகையில் (S. I. I. v, 90).

DSAL


முதல் - ஒப்புமை - Similar