Tamil Dictionary 🔍

மானம்

maanam


மதிப்புடைமை ; கற்பு ; பெருமை ; புலவி ; வலிமை ; வஞ்சினம் ; கணிப்பு ; அளவு கருவி ; ஒப்புமை ; அளவை ; அன்பு ; பற்று ; இகழ்ச்சி ; வெட்கம் ; குற்றம் ; வானூர்தி ; கோயில் விமானம் ; மண்டபம் ; கத்தூரி ; சவ்வாது ; வானம் ; ஒரு தொழிற்பெயர் விகுதி ; ஓர் இடைச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அபிமானம். மறத்திடை மானமேற் கொண்டு (பு. வெ. 5, 6 ). 14. Cf. abhimāna. Attachment; அவமானம். மானந்தலைவருவ செய்பவோ (நாலடி, 198). 15. Cf. avamāna. Disgrace; கௌரவம். நன்றேகாண் மானமுடையார் மதிப்பு (நாலடி, 294). 1. Honour, dignity; கற்பு. 2. Chastity; பெருமை. புகழு மானமு மெடுத்து வற்புறுத்தலும் (தொல். பொ. 41). 3. Pride. eminence; புலவி. மான மங்கையர் வாட்டமும் (சீவக. 2382). 4. Bouderie, sulks; வலிமை. (சூடா.) 5. Strength; சபதம். அப்படியே செய்வேனென மானஞ்செய்து (இராமநா. அயோத். 7). 6. Vow; கணிப்பு ஸௌர மானம். 7. Computation; அளவுகருவி. 8. Instrument or means of measurement; மாற்றாணி. (திருக்கோ. 335, உரை.) 9. Touch-needle; பட்டணம்படியில் அரைப்படி கொண்ட அளவு. (G. Sm. D. I. 1, 286.) 10. Half a Madras measure; இலச்சை. வஞ்சியை மீட்கிலே னென்னுமானமும் (கம்பரா. சடாயுவுயிர்நீ. 145). 16. Shame; குற்றம். மெய்ந்நிலை மயக்க மான மில்லை (தொல். எழுத். 47). 17. Fault; ஆகாசவிமானம். மானமிசை யூர்ந்து (கந்தபு. அசுரர்யா. 14). 18. Cf. vimāna. Aerial. chariot; கோவில்விமானம். பொன்மானந் தனக்கு வடமேற்றிசை (திருவிளை. கல்லானைக். 3). 19. Cf. vimāna. Vaulted roof of the inner shrine of a temple; மண்டபம். (பிங்.) 20. Pillared hall; கஸ்தூரி. 1. Musk; சவ்வாது. 2. Civet; ஆகாயம். செம்மானஞ் செற்று . . . மிளிருஞ் சடைக்கற்றை வேதியனே (தேவா. 1200, 10). Sky; ஒரு தொழிற்பெயர்விகுதி. பிடிமானம், சேர்மானம்; 1. A nominal suffix; தொறுப்பொருளில் வரும் இடைச்சொல். தினமானம் இது நடந்து வருகிறது. 2. An adverbial suffix meaning continuity; அன்பு. பாலு நீரும்போல மானம்வைத் தாண்டீரே (இராமநா. அயோத். 7). 13. Love, affection; பிரமாணம். (திருக்கோ. 335, உரை.) 12. Cf. pramāṇa. Test; means of knowledge; ஒப்புமை. மானமில்லுயர் மணிவண்ணன் (சீவக. 2747. 11. Cf. மான்5-. Comparison;

Tamil Lexicon


s. honour, favour, அபிமானம்; 2. arrogance, pride, அகங்காரம்; 3. shame, bashfulness, வெட்கம்; 4. urbanity, மரியாதை; 5. measure, அளவு; 6. form, rule, பிரமாணம்; 7. comparison, உவமை; 8. (improp. for வானம்) heaven; 9. affix, as in தீர் மானம்; 1. strength; 11. fault; 12. the computation of a year, solar, lunar or siderial as in சௌரமானம், சாந்திர மானம். மான கீனம் மானக்குறை, -க்கேடு, -பங் கம், -த்தாழ்ச்சி, disgrace, ignominy. மானங் காத்துக்கொள்ள, to preserve one's self-respect, dignity, chastity etc. மானங் குலைய, -கெட, to be deflowered, disgraced. மானஸ்தன், a respectable person. மானபாவன், a great man. மானமா, the yak or bos grunniens, கவரிமா. மானமில்லாதவன், a shameless fellow. மானி, மானவன், a chaste or modest person. தினமானம், daily. சௌரமானம், solar reckoning, motion of the sun in its orbit. தேவமானம், the periods of time among the gods. நரமானம், the period of man's life. பிரகற்பதிமானம், reckoning by the Jupiter's motion in its orbit. வெகுமானம், a present.

J.P. Fabricius Dictionary


, [māṉam] ''s.'' Honor, favor, greatness, பெருந்தன்மை. 2. Pride, self-respect, digni ty, பெருமை. 3. Shame, bashfulness, வெட் கம். 4. Measure in general, அளவு. 5. (சது.) Strength, வலி. 6. Fault, குற்றம். 7. Com parison, உவமை. 8. [''colloq. for'' வானம்.] The heaven or sky. 9. The computation of a year, solar, lunar, or siderial--as சௌரமா னம், சாந்திரமானம். W. p. 656. MANA.--''Note.'' The word generally takes certain pre fixes, as அபி, அனு, அவ, உவ, சன், &c., and differs a little in meaning according to the connection. Sometimes it is found in com bination, as தண்டைமானம், பகல்மானம், &c. ஒழுக்கமுள்ளஸ்திரிமானத்தைக்காப்பாள். A graci ous woman retaineth honor. (Prov. XI. 16.) மானத்தைமூடு. Cover your nakedness. ''(c.)''

Miron Winslow


māṉam
n. māna.
1. Honour, dignity;
கௌரவம். நன்றேகாண் மானமுடையார் மதிப்பு (நாலடி, 294).

2. Chastity;
கற்பு.

3. Pride. eminence;
பெருமை. புகழு மானமு மெடுத்து வற்புறுத்தலும் (தொல். பொ. 41).

4. Bouderie, sulks;
புலவி. மான மங்கையர் வாட்டமும் (சீவக. 2382).

5. Strength;
வலிமை. (சூடா.)

6. Vow;
சபதம். அப்படியே செய்வேனென மானஞ்செய்து (இராமநா. அயோத். 7).

7. Computation;
கணிப்பு ஸௌர மானம்.

8. Instrument or means of measurement;
அளவுகருவி.

9. Touch-needle;
மாற்றாணி. (திருக்கோ. 335, உரை.)

10. Half a Madras measure;
பட்டணம்படியில் அரைப்படி கொண்ட அளவு. (G. Sm. D. I. 1, 286.)

11. Cf. மான்5-. Comparison;
ஒப்புமை. மானமில்லுயர் மணிவண்ணன் (சீவக. 2747.

12. Cf. pramāṇa. Test; means of knowledge;
பிரமாணம். (திருக்கோ. 335, உரை.)

13. Love, affection;
அன்பு. பாலு நீரும்போல மானம்வைத் தாண்டீரே (இராமநா. அயோத். 7).

14. Cf. abhimāna. Attachment;
அபிமானம். மறத்திடை மானமேற் கொண்டு (பு. வெ. 5, 6 ).

15. Cf. avamāna. Disgrace;
அவமானம். மானந்தலைவருவ செய்பவோ (நாலடி, 198).

16. Shame;
இலச்சை. வஞ்சியை மீட்கிலே னென்னுமானமும் (கம்பரா. சடாயுவுயிர்நீ. 145).

17. Fault;
குற்றம். மெய்ந்நிலை மயக்க மான மில்லை (தொல். எழுத். 47).

18. Cf. vimāna. Aerial. chariot;
ஆகாசவிமானம். மானமிசை யூர்ந்து (கந்தபு. அசுரர்யா. 14).

19. Cf. vimāna. Vaulted roof of the inner shrine of a temple;
கோவில்விமானம். பொன்மானந் தனக்கு வடமேற்றிசை (திருவிளை. கல்லானைக். 3).

20. Pillared hall;
மண்டபம். (பிங்.)

māṉam
n. Perh. மான1¢. cf. நானம்1. (அக. நி.)
1. Musk;
கஸ்தூரி.

2. Civet;
சவ்வாது.

māṉam
n. வானம். [K. bān.]
Sky;
ஆகாயம். செம்மானஞ் செற்று . . . மிளிருஞ் சடைக்கற்றை வேதியனே (தேவா. 1200, 10).

māṉam
n. part.
1. A nominal suffix;
ஒரு தொழிற்பெயர்விகுதி. பிடிமானம், சேர்மானம்;

2. An adverbial suffix meaning continuity;
தொறுப்பொருளில் வரும் இடைச்சொல். தினமானம் இது நடந்து வருகிறது.

DSAL


மானம் - ஒப்புமை - Similar