Tamil Dictionary 🔍

மரணம்

maranam


சாவு ; ஐவகை அவத்தையுள் மிகு மயக்கமும் அயர்ச்சியும் உண்டாகும் நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாவு. மரணமானால் வைகுந்தங்கொடுக்கும் பிரான் (திவ்.திருவாய், 9, 10, 5); 1. Death, mortality; பஞ்சபாணாவஸ்தையுள் மிகுமயக்கமும் அயர்ச்சியும் உண்டாம் நிலை. மரணந்தானே மிகு மயக்கோ டயர்ப்பாம் (சூடா.) 2. Sinking in a dead faint, one of paca-pāṇā-vastai;, q.v.

Tamil Lexicon


s. death, mortality, சாவு. மரண ஏதுக்கள், forebodings of death. மரணகாலம், the time of death. மரணக்குறி, signs of death. மரணசாசனம், -சாதனம், the last will, the testament of a deceased person. மரண சேஷ்டை, convulsions before death. மரணபயங்கரம், -க்கெடி, dread of death. மரணப்போர், struggling with death. மரணமடைய, to die, to depart this life. மரணாவஸ்தை, மரணவேதனை, the agony of death.

J.P. Fabricius Dictionary


, [maraṇam] ''s.'' Death, mortality, சாவு. W. p. 644. MARAN'A. ''(c.)'' கரணந்தப்பினால்மரணம்..... If the leap fail, then death; i. e. be careful in a dangerous transaction. ''[prov.]''

Miron Winslow


maraṇam
n. maraṇa.
1. Death, mortality;
சாவு. மரணமானால் வைகுந்தங்கொடுக்கும் பிரான் (திவ்.திருவாய், 9, 10, 5);

2. Sinking in a dead faint, one of panjca-pāṇā-vastai;, q.v.
பஞ்சபாணாவஸ்தையுள் மிகுமயக்கமும் அயர்ச்சியும் உண்டாம் நிலை. மரணந்தானே மிகு மயக்கோ டயர்ப்பாம் (சூடா.)

DSAL


மரணம் - ஒப்புமை - Similar