Tamil Dictionary 🔍

மந்தம்

mandham


தாமதம் ; அறிவுமழுக்கம் ; சோம்பல் ; புன்மை ; மென்மைத்தன்மை ; பாடற்பயன் எட்டனுள் ஒன்றான சமனிசை ; படுத்தலிசை ; தென்றல் ; குதிரைநடைவகை ; தனக்கு மாத்திரங் கேட்கும்படி மந்திரோச்சாரணஞ் செய்கை ; செரியாமை ; குடிவெறி ; மத்து ; செறிவு ; செவ்வியழியாமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோம்பல். (சூடா.) 3. Indolence, laziness; அறிவு மழுக்கம். மந்தமற வோதுவிக்க (திருமுறைகண். 5.) 2. Dullness, stupidity, ignorance; மிருதுத்தன்மை. மந்த மலர் (தேவா. 1009,6). (W.) 5. Softness; freshness; பாடற்பயன் எட்டனுள் ஒன்றான சமனிசை. (சிலப். 3, 16, உரை.) 6. (Mus.) Medium note, one of eight pāṭaṟ-payaṉ, q.v.; படுத்தலிசை. எண் படுத்தல் மந்தம் (சீவக. 735, உரை.) 7. (Mus.) Lowness of tone; தென்றல். மந்தம் வந்துலவுசீர் மழபாடியே (தேவா. 316, 3). 8. Gentle wind, southern wind; See மந்தச்சா. (W.) 9. (Astron.) Anomaly. . 10. (Astron.) See மந்தஸ்புடம். (W.) குதிரை நடைவகை. (சுக்கிரநீதி, 72.) 11. A pace of horse; தனக்குமாத்திரங் கேட்கும்படி மந்திரோச்சாரணஞ் செய்கை. (சைவச. பொது. 152.) 12. Reciting a mantra in a tone audible to the reciter alone; அசீரணம். குழந்தைக்கு வயிற்றில் மந்தந்தட்டியிருக்கிறது. 13. Indigestion; குடிவெறி. (W.) 14. Drunkenness; மத்து. (W.) Churning stick; செறிவு. மல்லிகை மந்தக்கோவை. (திவ். திருவாய். 9,9,8). 1. Density, crowdedness; செவ்வியழியாமை. (திவ். திருவாய். 9,9,8, பன்னீ.) 2. Freshness; தாமதம். மந்தத்தேகும் தேரே (இரகு. கடிமண. 14). 1. Slowness, tardiness; அற்பம். (W.) 4. Meanness, worthlessness, smallness;

Tamil Lexicon


s. slowness, tardiness, தாமதம்; 2. dulness, மழுங்கல்; 3. stupidity, மூடத்தனம்; 4. indigestion, dyspepsia, அசீரணம்; 5. idleness laziness, சோம் பல்; 6. drunkenness, வெறி; 7. a churning stick, மத்து; 8. meanness, smallness, அற்பம்; 9. (in music) lowness of tone, மந்தவிசை. அது மந்தம்கொடுக்கும், that will cause indigestion. மந்தகதி, slow pace. மந்தகாசம், a species of consumption; 2. a smile, மந்தஹாசம். மந்தகுணம், dulness, apathy. மந்தக் காய்ச்சல், fever from indigestion. மந்த புத்தி, stupidity. மந்த மா, an elephant, a slow-going animal. மந்த மாருதம், southerly wind (as being gentle). மந்த வாரம், Saturday. மந்தன், a block-head, a dull person; 2. Saturn, (as slow) சனி. மந்தாசம், மந்தாசியம், a smile, a gentle laugh.

J.P. Fabricius Dictionary


, [mantam] ''s.'' Slowness, tardiness, தாம தம். 2. Dulness, stupidity, கூர்மையின்மை. 3. A disease, indigestion, dyspepsia, அசீர ணம். 4. Meanness, smallness, worthless ness, அற்பம். 5. ''[in music.]'' Lowness of tone, மந்தவிசை. 6. ''[in astron.]'' Anomaly. 7. The first equated heliocentric longi tude. 8. Drunkenness, வெறி. W. p. 642. MANDA. 9. (சது.) A churning stick, மத்து. ''(Sa. Mant'ha.)'' அவனுக்குமந்தங்கொடுக்கும். That will give him indigestion. மந்தம்அடிபட்டுப்போயிற்று. Indigestion is removed.

Miron Winslow


mantam
n. manda.
1. Slowness, tardiness;
தாமதம். மந்தத்தேகும் தேரே (இரகு. கடிமண. 14).

2. Dullness, stupidity, ignorance;
அறிவு மழுக்கம். மந்தமற வோதுவிக்க (திருமுறைகண். 5.)

3. Indolence, laziness;
சோம்பல். (சூடா.)

4. Meanness, worthlessness, smallness;
அற்பம். (W.)

5. Softness; freshness;
மிருதுத்தன்மை. மந்த மலர் (தேவா. 1009,6). (W.)

6. (Mus.) Medium note, one of eight pāṭaṟ-payaṉ, q.v.;
பாடற்பயன் எட்டனுள் ஒன்றான சமனிசை. (சிலப். 3, 16, உரை.)

7. (Mus.) Lowness of tone;
படுத்தலிசை. எண் படுத்தல் மந்தம் (சீவக. 735, உரை.)

8. Gentle wind, southern wind;
தென்றல். மந்தம் வந்துலவுசீர் மழபாடியே (தேவா. 316, 3).

9. (Astron.) Anomaly.
See மந்தச்சா. (W.)

10. (Astron.) See மந்தஸ்புடம். (W.)
.

11. A pace of horse;
குதிரை நடைவகை. (சுக்கிரநீதி, 72.)

12. Reciting a mantra in a tone audible to the reciter alone;
தனக்குமாத்திரங் கேட்கும்படி மந்திரோச்சாரணஞ் செய்கை. (சைவச. பொது. 152.)

13. Indigestion;
அசீரணம். குழந்தைக்கு வயிற்றில் மந்தந்தட்டியிருக்கிறது.

14. Drunkenness;
குடிவெறி. (W.)

mantam
n. mantha.
Churning stick;
மத்து. (W.)

mantam
n. mandra.
1. Density, crowdedness;
செறிவு. மல்லிகை மந்தக்கோவை. (திவ். திருவாய். 9,9,8).

2. Freshness;
செவ்வியழியாமை. (திவ். திருவாய். 9,9,8, பன்னீ.)

DSAL


மந்தம் - ஒப்புமை - Similar