Tamil Dictionary 🔍

பாவை

paavai


பொம்மைபோன்ற அழகிய பெண் ; பதுமை ; அழகிய உருவம் ; கருவிழி ; பெண் ; குரவமலர் ; காண்க : பாவைக்கூத்து ; நோன்பு வகை ; திருவெம்பாவை ; திருப்பாவை ; இஞ்சிக்கிழங்கு ; மதில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழகிய உருவம். சித்திரப்பாவையினத்தக வடங்கி (நன். 40). 2. Image, picture, portrait; பதுமை. மரப்பாவை நாணா லுயிர் மருட்டியற்று (குறள், 1020). 1. Puppet, doll; மதில். (யாழ். அக.) 11. Wall; இஞ்சிக்கிழங்கு. செய்யாப்பாவை வளர்ந்து கவின்முற்றி (மலைபடு. 125). 10. Root of the ginger plant; . 9. A hymn in Nālāyira-p-pirapantam. See திருப்பாவை. தொல்பாவை பாடி யருளவல்ல பல்வனையாய் (திவ். திருப்பா. தனியன்). . 8. A hymn in Tiru-vācakam. See திருவெம்பாவை. (திருவாலவா. 27, 8.) நோன்புவகை. நாமு நம்பாவைக்குச் செய்யுங் கிரிசைகள் (திவ். திருப்பா. 2). 7. A religious observance; . 6. See பாவைக்கூத்து. திருவின் செய்யோ ளாடிய பாவையும் (சிலப். 6, 61). குரவமலர். குரவம் பயந்த செய்யாப் பாவை (ஐங்குறு. 344). 5. Flower of the common bottle-flower tree; பெண். பாடக மெல்லடிப் பாவை (தேவா.538, 1). 4. Woman, lady, damsel; கருவிழி. கருமணியிற் பாவாய் நீ போதாய் (குறள், 1123). 3. Pupil of the eye;

Tamil Lexicon


s. a statue, image, a picture, சித்திரப்பாவை; 2. a woman, a damsel, பெண்; 3. a puppet, பொம்மல். பாவைக் கூத்து, puppet-show.

J.P. Fabricius Dictionary


, [pāvai] ''s.'' Statue, image, picture, portrait, சித்திரப்பாவை. 2. A well மதில். 3. A woman, lady, damsel, பெண். (சது.) 4. The image of a person appearing in an other's eye, கட்பாவை. 5. A puppet, பதிமை.

Miron Winslow


pāvai
n. [T. pāpa K. pāpe M. pāva.]
1. Puppet, doll;
பதுமை. மரப்பாவை நாணா லுயிர் மருட்டியற்று (குறள், 1020).

2. Image, picture, portrait;
அழகிய உருவம். சித்திரப்பாவையினத்தக வடங்கி (நன். 40).

3. Pupil of the eye;
கருவிழி. கருமணியிற் பாவாய் நீ போதாய் (குறள், 1123).

4. Woman, lady, damsel;
பெண். பாடக மெல்லடிப் பாவை (தேவா.538, 1).

5. Flower of the common bottle-flower tree;
குரவமலர். குரவம் பயந்த செய்யாப் பாவை (ஐங்குறு. 344).

6. See பாவைக்கூத்து. திருவின் செய்யோ ளாடிய பாவையும் (சிலப். 6, 61).
.

7. A religious observance;
நோன்புவகை. நாமு நம்பாவைக்குச் செய்யுங் கிரிசைகள் (திவ். திருப்பா. 2).

8. A hymn in Tiru-vācakam. See திருவெம்பாவை. (திருவாலவா. 27, 8.)
.

9. A hymn in Nālāyira-p-pirapantam. See திருப்பாவை. தொல்பாவை பாடி யருளவல்ல பல்வனையாய் (திவ். திருப்பா. தனியன்).
.

10. Root of the ginger plant;
இஞ்சிக்கிழங்கு. செய்யாப்பாவை வளர்ந்து கவின்முற்றி (மலைபடு. 125).

11. Wall;
மதில். (யாழ். அக.)

DSAL


பாவை - ஒப்புமை - Similar