பாவாடை
paavaatai
பெண்களின் உடைவகை ; பெரியோர் முதலியவர் நடந்துசெல்லத் தரைமீது விரிக்குஞ் சீலை ; கடவுள் முதலியோர்க்கு முன் ஆடையிற் படைக்கும் அன்னம் ; மேலெழ வீசும் ஒருவகை விருதுச்சீலை ; மேசைவிரிப்பு ; வேலைநாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேலையாள். (I. M. P. Cg. 146.) Servant; மேசைவிரிப்பு. (W.) 5. Table cloth; பெண்களின் உடைவகை. 4. Skirt; பெரியோர் முதலியவர் நடந்து செல்லத் தரைமீது விரிக்குஞ் சீலை. நாடு மகிழவவ்வளவும் நடைக்கா வணம் பாவாடையுடன் ... நிரைத்து (பெரியபு. எயர்கோன். 57). 1. Cloth or carpet spread on the ground for persons of distinction to walk on; கடவுள் முதலியோர்க்குமுன் ஆடையிற் படைக்கும் அன்னம். பதம்பெற்றார்க்குப் பகல்விளக்கும் பாவாடையுமாக் கொள்ளீரே (கலிங். 548). 2. Boiled rice heaped on a cloth before a deity or eminent person; மேலெழ வீசும் ஒருவகை விருதுச்சீலை. Loc. 3. Cloth used for waving before a deity or a person of distinction;
Tamil Lexicon
s. a petticoat; 2. cloth spread on the ground in honorary decoration, நடைசீலை; 3. a table cloth; 4. an offering to the gods, பாவாடை யமுது. பாவாடைபோட, to spread cloth on the ground in honorary decoration, பாவாடை விரிக்க; 2. to give an offering (of rice) to the gods. பாவாடைவீச, to wave a white cloth as a signal; 2. to show a flog of truce.
J.P. Fabricius Dictionary
paavaaTe பாவாடெ shirt, petticoat
David W. McAlpin
, ''s.'' A petticoat.
Miron Winslow
pāvāṭai
n. பாவு-+ஆடை. [T. K. pāvada M. pāvāṭa.]
1. Cloth or carpet spread on the ground for persons of distinction to walk on;
பெரியோர் முதலியவர் நடந்து செல்லத் தரைமீது விரிக்குஞ் சீலை. நாடு மகிழவவ்வளவும் நடைக்கா வணம் பாவாடையுடன் ... நிரைத்து (பெரியபு. எயர்கோன். 57).
2. Boiled rice heaped on a cloth before a deity or eminent person;
கடவுள் முதலியோர்க்குமுன் ஆடையிற் படைக்கும் அன்னம். பதம்பெற்றார்க்குப் பகல்விளக்கும் பாவாடையுமாக் கொள்ளீரே (கலிங். 548).
3. Cloth used for waving before a deity or a person of distinction;
மேலெழ வீசும் ஒருவகை விருதுச்சீலை. Loc.
4. Skirt;
பெண்களின் உடைவகை.
5. Table cloth;
மேசைவிரிப்பு. (W.)
pāvāṭai
n. perh. பாவு-+.
Servant;
வேலையாள். (I. M. P. Cg. 146.)
DSAL