Tamil Dictionary 🔍

நாடி

naati


நாட்டிலுள்ளவள் ; நாட்டையுடையவள் ; இரத்தக்குழாய் முதலியன ; மூச்சுக்குழாய் யாழின் நரம்பு ; உட்டொளை ; பூவின் தாள் ; நாழிகை ; மூக்கு ; மோவாய் ; மாளிகையின் மேற்பாகத்தோர் உறுப்பு ; சோதிடநூல் ; தாதுநரம்பு ; இலைநரம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாட்டிலுள்ளவள். மிதிலை நாடிக்கும் (கம்பரா. சித்திர. 48). 1. Woman of a country; நாட்டையுடையாள். மையறு சிறப்பின் வானநாடி (சிலப். 11, 215). 2. Queen of a country; வாதபித்த சிலேட்டுமங்களைக் குறிக்கும் தாது நரம்பு. மூளையெலும்புகள் நாடி நரம்புகள் (திருப்பு. 918). 1. Pulse, of three kinds, viz., vāta-nāṭi, pitta-nāṭi, cliēṭṭuma-nāṭi; இரத்தக் குழாய் முதலியன. 2. Artery; vein; tendon; sinew; muscle; ligament; இடை, பிங்கலை, சுழிமுனை என்ற சுவாசக் குழாய்கள். 3. Tubular organs of breath, of which there are three, viz. iṭai, piṅkalai, cuḻimuṉai; யாழ்நரம்பு. 4. Lute-string; உட்டொளையுடையது. (அரு. நி.) 5. Anything tubular; tubular stalk, as of a plant; பூவின் தாள். (யாழ். அக.) 6. Flower-stalk; சோதிடநூல். சுக்கிரநாடி. 7. Astrological treatise; நாழிகை. (சூடா.) 8. The Indian hour of 24 minutes; மயிர். (அக. நி.) 9. Human hair; மோவாய். நல்ல வார்த்தை சொல்லி நாடியைத் தாங்கினான். Tinn. Chin; மூக்கு. (தைலவ. தைல.) 1. Nose; மாளிகையின் மேற்பாகத்த தோர் உறுப்பு. நாடிமுக நான்கதனின் (சீவக. 598). 2. A component part of the upper storey of a mansion;

Tamil Lexicon


s. an artery, a vein, a tendon, நரம்பு; 2. the pulse, தாது; 3. an Indian hour of 24 minutes, நாழிகை. நாடிக்குறி, pulse indication. நாடிதாரணை, the system of nerves and arteries with their ramifications. நாடிநிலை, state of the pulse. நாடிபார்க்க, to feel the pulse. நாடிப் பரிட்சை, acquaintance with the art of feeling the pulse. நாடிமண்டலம், the celestial equator. நாடியொடுக்கம், நாடிவிழுந்துபோதல், the sinking of the pulse. நாடியோட்டம், the beating of the pulse; the state of the pulse. அசாத்தியநாடி, pulse indicating death (opp. to சாத்தியநாடி, a pulse indicating recovery).

J.P. Fabricius Dictionary


, [nāṭi] ''s.'' [''prov. for'' தாடி.] The chin. நல்லவார்த்தைச்சொல்லிநாடியைத்தாங்கினான். He spoke peacefully and touched the other's chin.

Miron Winslow


nāṭi,
n. Fem. of நாடன்.
1. Woman of a country;
நாட்டிலுள்ளவள். மிதிலை நாடிக்கும் (கம்பரா. சித்திர. 48).

2. Queen of a country;
நாட்டையுடையாள். மையறு சிறப்பின் வானநாடி (சிலப். 11, 215).

nāṭi,
n. nādi.
1. Pulse, of three kinds, viz., vāta-nāṭi, pitta-nāṭi, cliēṭṭuma-nāṭi;
வாதபித்த சிலேட்டுமங்களைக் குறிக்கும் தாது நரம்பு. மூளையெலும்புகள் நாடி நரம்புகள் (திருப்பு. 918).

2. Artery; vein; tendon; sinew; muscle; ligament;
இரத்தக் குழாய் முதலியன.

3. Tubular organs of breath, of which there are three, viz. iṭai, piṅkalai, cuḻimuṉai;
இடை, பிங்கலை, சுழிமுனை என்ற சுவாசக் குழாய்கள்.

4. Lute-string;
யாழ்நரம்பு.

5. Anything tubular; tubular stalk, as of a plant;
உட்டொளையுடையது. (அரு. நி.)

6. Flower-stalk;
பூவின் தாள். (யாழ். அக.)

7. Astrological treatise;
சோதிடநூல். சுக்கிரநாடி.

8. The Indian hour of 24 minutes;
நாழிகை. (சூடா.)

9. Human hair;
மயிர். (அக. நி.)

nāṭi,
n. தாடி.
Chin;
மோவாய். நல்ல வார்த்தை சொல்லி நாடியைத் தாங்கினான். Tinn.

nāṭi,
n. cf. nāsikā.
1. Nose;
மூக்கு. (தைலவ. தைல.)

2. A component part of the upper storey of a mansion;
மாளிகையின் மேற்பாகத்த தோர் உறுப்பு. நாடிமுக நான்கதனின் (சீவக. 598).

DSAL


நாடி - ஒப்புமை - Similar