Tamil Dictionary 🔍

சுருள்

surul


வெற்றிலைச் சுருள் ; சுருளுகை ; சுருண்ட பொருள் ; கட்டு ; ஐவகைக் கூந்தல் முடிகளுள் ஒன்று ; மகளிர் காதணிவகை ; ஒலைச்சுருளின் மடிப்பு ; திருமணத்தில் மணமக்களுக்குத் தாம்பூலத்துடன் கொடுக்கும் பரிசு ; நாளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுருண்ட பொருள். தாமரை மென்சுருள். (சூளா.நாட்டுப்.18). 2. Rolls, scroll, coil, curl; சுருளுகை. 1. Rolling; வெற்றிலைச்சுருள். சுருளைச் சேடியர் செப்பொடு மேந்த (சீவக. 197, உரை). 7. Roll of betel leaves; கலியாணத்தில் மணமக்களுக்குத் தாம்பூலத் துடள் கொடுக்கும் பரிசு. Loc. 8. Presents with betel given to bride and bridegroom; நாளம். (பிங்.) Lotus stalk; மகளிர் காதணிவகை.செட்பொன் செய்சுருளுந் தெய்வக்குழைகளும் (கம்பரா. பூக்கொய். 5). 6. Women's ear-ornament; கட்டு. இலைச்சுருள். 3. Bundle, as of leaves; ஒலைச்சுருளின் மடிப்பு. சுருள்பெறு மடியை நீக்கி. (பெரியபு. தடுத்தாட். 58). 4. Fold of an ola roll; மகளிர் ஐம்பான்முடிகளுள் ஒன்று. (பு. வெ. 9, 35, உரை.) 5. Women's hair curled and tied up in dressing, one of ai-m-pāṉ-muṭi, q.v.;

Tamil Lexicon


s. a roll, scroll, curl, சுருட்டு; 2. a curled or crisped leaf; 3. the involved folds of the young lotus plant while yet under water; 4. women's earornament. சுருள் அமுது, betel and arecanut, a term of respectful offering, தாம் பூலம். சுருள் பண்ண, to roll up an ola letter. சுருள் மடிக்க, to fold betel-leaf. ஓலைச் சுருள், a palm-leaf scroll. பட்டுச் சுருள், a roll of silk. பாய்ச் சுருள், a furl of sails, a roll of mats. வெற்றிலைச் சுருள், a roll of betelleaves for chewing.

J.P. Fabricius Dictionary


, [curuḷ] ''s.'' Roll, scroll, involution, coil, சுருட்டு. 2. A curl, ringlet, crisped leaf, tendril, &c., மயிர்ச்சுருள்முதலியன. 3. A roll of betel leaves for chewing, வெற்றிலைச்சுருள். ''(c.)'' 4. The involved folds of the young lotus, தாமரையுட்சுருள். 5. Female hair, பெண் மயிர். 6. Ladies' hair dressed or folded in a particular manner, ஐம்பாலினொன்று. சுருளில்வைத்தடக்கஞ்செய்திருக்கிறது. This is enclosed in an envelope.

Miron Winslow


curuḷ,
n. சுருள்-. [K. suruḷi, M. curuḷ, Tu. suruḷ.]
1. Rolling;
சுருளுகை.

2. Rolls, scroll, coil, curl;
சுருண்ட பொருள். தாமரை மென்சுருள். (சூளா.நாட்டுப்.18).

3. Bundle, as of leaves;
கட்டு. இலைச்சுருள்.

4. Fold of an ola roll;
ஒலைச்சுருளின் மடிப்பு. சுருள்பெறு மடியை நீக்கி. (பெரியபு. தடுத்தாட். 58).

5. Women's hair curled and tied up in dressing, one of ai-m-pāṉ-muṭi, q.v.;
மகளிர் ஐம்பான்முடிகளுள் ஒன்று. (பு. வெ. 9, 35, உரை.)

6. Women's ear-ornament;
மகளிர் காதணிவகை.செட்பொன் செய்சுருளுந் தெய்வக்குழைகளும் (கம்பரா. பூக்கொய். 5).

7. Roll of betel leaves;
வெற்றிலைச்சுருள். சுருளைச் சேடியர் செப்பொடு மேந்த (சீவக. 197, உரை).

8. Presents with betel given to bride and bridegroom;
கலியாணத்தில் மணமக்களுக்குத் தாம்பூலத் துடள் கொடுக்கும் பரிசு. Loc.

curuḷ
n. சுருள்-.
Lotus stalk;
நாளம். (பிங்.)

curuḷ-,
2 v. intr. [K. suruḷ, M. curuḷ.]
1. To become coiled; to roll; to curl, as hair;
சுருளாதல். நீண்டு குழன்று...கடைசுருண்டு (கம்பரா.உருக்காட்டு.57).

2. To shrivel, shrink, as leaf;
சுருங்குதல்.

3. To droop, as from heat, hunger;
சோர்தல்.

4.To be reduced to severs straits;
துன்பத்திற்குள்ளா தல். Loc.

DSAL


சுருள் - ஒப்புமை - Similar