Tamil Dictionary 🔍

கோலம்

koalam


அழகு ; நிறம் ; உருவம் ; தன்மை ; வேடம் ; ஆபரணம் ; அலங்காரம் ; மா , கற்பொடி முதலியவற்றாலிடுங் கோலம் ; விளையாட்டு ; பெருந்துன்பநிலை ; முயற்சி ; சிறு நீரோட்டம் ; பன்றி ; முள்ளம்பன்றி ; இலந்தைமரம் ; தெப்பம் ; குரங்கு ; பாக்கு ; பீர்க்கங்கொடி ; கருக்கொண்ட மகளிர்க்குச் செய்யும் வளைகாப்புச் சடங்கு ; தக்கோலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாக்கு. (பிங்.) 1. Areca-nut; குரங்கு. (பிங்.) Monkey; தெப்பம். (w.) 4. Raft; See இலந்தை. (பிங்.) 3. Jujube tree. பன்றி. கேழ றிகழ்வரக் கோலமொடு பெயரிய (பரிபா. 2, 16). 1. Hog, wild hog; முள்ளம்பன்றி. (திவா.) 2. Porcupine; பீர்க்கு. (பிங்.) 2. Sponge-gourd, s. cl., Luffa acutangula; சிறு நீரோட்டம். (பிங்.) 2. Streamlet; தக்கோலம். (மூ. அ.) Cubeb; அழகு. கோலத் தனிக்கொம்பர் (திருக்கோ. 45). 1. Beauty, gracefulness, handsomeness; நிறம். கார்க்கோல மேனி யனை (கம்பரா. கும்பக. 154) . 2. Colour; உருவம். மானுடக்கோலம். 3. Form, shape, external or general appearance; தன்மை. 4. Nature; வேடம். உள்வரிக் கோலத்து (சிலப். 5, 216). 5. Costume; appropriate dress; attire, as worn by actors; trappings; equipment; habiliment; ஆபரணம். குறங்கிணை திரண்டன கோலம் பொறா அ (சிலப். 30, 18). 6. Ornament, as jewelry; அலங்காரம். புறஞ்சுவர் கோலஞ்செய்து (திவ். திருமாலை, 6). 7. Adornment, decoration, embellishment; மா, கற்பொடி முதலியவற்றாலிடுங் கோலம். தரை மெழுகிக் கோலமிட்டு (குமர. மீனட், குறம். 25). 8. Ornamental figures drawn on floor, wall or sacrificial pots with rice-flour, white stone-powder, etc.; கர்ப்பிணிகளுக்குச் செய்யும் வலைக்காப்புச் சடங்கு. Loc. 9. Ceremony of providing pregnant woman with bangles in the fifth or seventh month after conception; விளையாட்டு. அல்லமன்றன் கோலமென்சொல்வேன் (பிரபுலிங். பிரபுதே. 73). 10. Play, sport; பெருந்துன்ப நிலை. Loc. 11. Wretched condition; முயற்சி. கோலங்கொ ளுயிர்களும் (திவ், திருவாய். 5, 6, 10). 1. Exertion, effort;

Tamil Lexicon


s. form, shape, figure, உருவம்; 2. ornament, decoration, அலங்கரிப்பு; 3. beauty, அழகு; 4. pomp, magnificence, ஆடம்பரம்; 5. the habit, dressoutward appearance, வேஷம்; 6. lines or figures on the floor as ornamental devices; 7. play, sport; 8. a streamlet; 9. exertion, effort, முயற்சி. தலைவிரிகோலமாய்த்திரிய, to wander about with deshevelled hair. கோலக்காரன், a sportmaker. கோலம்போட, -இட, to paint the floor or pots with diverse figures or lines. கோலம் (ஊர் கோலம் ) வர, to go in procession. காலாகோலம், irregularity, confusion. பிணக்கோலம், funeral procession. பிறந்தகோலம், nakedness. மணக்கோலம், wedding procession or attire. மழைக்கோலம், rainy appearance cloudiness. ராசகோலம், royal magnificence. இராசகோலமாடுகிறான், he acts as the king in the comedy.

J.P. Fabricius Dictionary


, [kōlm] ''s.'' Form, shape, symmetry, external or general appearance, உருவம். 2. Beauty, gracefulness, handsomeness, அழகு. 3. Ornaments, embellishments, அலங்கரிப்பு, ஒப்பனை. 4. Costume, appropriate dress, attire--as for a drama; livery; mode of dress, உடைக்கோலம். 5. Trap pings, ornament, equipment, habiliment, படைக்கோலம். 6. Mein, air, manner, figure, guise, நடைக்கோலம். 7. Distinguishing or characteristic marks, symptoms, appear ances, character; &c., சுபாவக்கோலம். 8. Lines or figures, made on a floor, wall, sacrificial pot, &c., ornamental devices, மாக்கோலம். 9. Lines, figures or marks with sandal-paste, &c., on women's breasts and men's arms, சந்தனக்கோலம். 1. A stream, நீரோட்டம். 11. Arecanut, பாக்கு. 12. A kind of the garden plant--as பீர்க்கு. 13. (சது.) A bird, the feathered tribe in general, பறவை.

Miron Winslow


kōlam
n. [T. kōlamu, K. kōla, M. kōlam.]
1. Beauty, gracefulness, handsomeness;
அழகு. கோலத் தனிக்கொம்பர் (திருக்கோ. 45).

2. Colour;
நிறம். கார்க்கோல மேனி யனை (கம்பரா. கும்பக. 154) .

3. Form, shape, external or general appearance;
உருவம். மானுடக்கோலம்.

4. Nature;
தன்மை.

5. Costume; appropriate dress; attire, as worn by actors; trappings; equipment; habiliment;
வேடம். உள்வரிக் கோலத்து (சிலப். 5, 216).

6. Ornament, as jewelry;
ஆபரணம். குறங்கிணை திரண்டன கோலம் பொறா அ (சிலப். 30, 18).

7. Adornment, decoration, embellishment;
அலங்காரம். புறஞ்சுவர் கோலஞ்செய்து (திவ். திருமாலை, 6).

8. Ornamental figures drawn on floor, wall or sacrificial pots with rice-flour, white stone-powder, etc.;
மா, கற்பொடி முதலியவற்றாலிடுங் கோலம். தரை மெழுகிக் கோலமிட்டு (குமர. மீனட், குறம். 25).

9. Ceremony of providing pregnant woman with bangles in the fifth or seventh month after conception;
கர்ப்பிணிகளுக்குச் செய்யும் வலைக்காப்புச் சடங்கு. Loc.

10. Play, sport;
விளையாட்டு. அல்லமன்றன் கோலமென்சொல்வேன் (பிரபுலிங். பிரபுதே. 73).

11. Wretched condition;
பெருந்துன்ப நிலை. Loc.

kōlam
n. கோலு-.
1. Exertion, effort;
முயற்சி. கோலங்கொ ளுயிர்களும் (திவ், திருவாய். 5, 6, 10).

2. Streamlet;
சிறு நீரோட்டம். (பிங்.)

kōlam
n. kōla.
1. Hog, wild hog;
பன்றி. கேழ றிகழ்வரக் கோலமொடு பெயரிய (பரிபா. 2, 16).

2. Porcupine;
முள்ளம்பன்றி. (திவா.)

3. Jujube tree.
See இலந்தை. (பிங்.)

4. Raft;
தெப்பம். (w.)

kōlam
n. perh. gō-lāṅgūla.
Monkey;
குரங்கு. (பிங்.)

kōlam
n.
1. Areca-nut;
பாக்கு. (பிங்.)

2. Sponge-gourd, s. cl., Luffa acutangula;
பீர்க்கு. (பிங்.)

kōlam
n. cf. தக்கோலம்.
Cubeb;
தக்கோலம். (மூ. அ.)

DSAL


கோலம் - ஒப்புமை - Similar