கொம்பு
kompu
kompu,
n. [T. kommu, K. Tu. kombu, M. kompu.]
1. Bough, branch, twig;
மரக்கிளை. வளியெறி கொம்பின் வருந்தி (மணி. 24, 86).
2. Seedling;
நாற்றுமூளை. Loc.
3. Stick, staff, pole;
கோல். Madr.
4. Poles of a palanquin, etc.;
பல்லக்கு முதலியவற்றின் கொம்பு. முற்கொம்புதாங்கி முன்னடக்கும் . . . முனிவன் (திருவிளை. இந்திரன். 65).
5. Horn of an animal;
விலங்கின் கொம்பு.
6. Tusk of an elephant or hog;
யானை முதலியவற்ரின் தந்தம். யானையின் கொம்பினைப் பறித்து (திவ். பெரியதி. 4, 2, 4).
7. Horn, pipe, cornet;
ஊது கொம்பு. கொம்பு ஒலிப்ப (மதுரைக். 185, உரை).
8. Squirt, tube for discharging fluids in jets;
நீரைவீசுங் கருவி. சிவிறியுங் கொம்புஞ் சிதறு விரைநீரும் (மணி. 28, 10).
9. The symbol in certain Tamil letters as
கெ, கொ, கெ, கொ முதலிய எழுத்துக்களில் முற்பகுதியாயமைந்திருக்கும் அடையாளக்குறி. வரைந்திடுந் திறனடைந்த கொம்புபோல (திருவேங். கலம். 27).
10. Farthest end of a tank bund;
ஏரிக்கரையின் கோடி. Loc.
DSAL