Tamil Dictionary 🔍

கொண்டி

konti


koṇṭi,
n. கொள்-.
1. Getting possession of, securing, as property;
பிறர்பொருள் முதலியவற்றைக் கொள்ளுகை. நெஞ்சு நடுக்குறூஉக் கொண்டி மகளிர் (மதுரைக். 583).

2. Food;
உணவு. கட்கொண்டிக் குடிப்பாக்கத்து (மதுரைக். 137).

3. [K. koṭṭaja.] Tribute;
கப்பம். கொண்டி வேண்டுவனாயின் (புறநா. 51, 6).

4. Theft;
களவு. கொண்டியிலே பிடியுண்டு (ஈடு, 7, 7, 2).

5. [M. koṇṭi.] Plunder, pillage;
கொள்ளை. கொண்டியும் பெரிதென (புறநா. 78).

6. Abundance;
மிகுதி. கொண்டி யுண்டித் தொண்டையோர் (பெரும்பாண். 454).

7. [T. koṇṭe, K. koṇdegāra.] Insubordinate, naughty person or animal;
அடங்காதவன்-வள்-து. கொந்தி யாயினவா றென்றன் கோதையே (தேவா.710, 7).

8. [M. koṇṭi.] Prostitute, concubine;
பரத்தை. வீழ்ந்த கொண்டிமல்லன் மார்பு மடுத்தனன் (நற். 174).

9. [K. Tu. koṇdi.] corner pin of a door on which it swings;
கதவுகுடுமி.

10. Clamp, cleat of a door lock;
சங்கிலிமாட்டும் இரும்பு.

11. [T. koṇdi.] The pin that holds the share to the plough;
ஏர்க்கொழுமாட்டும் ஆணி. Loc.

koṇṭi,
n. கொண்டியம். Loc.
1. Grievance;
மனவருத்தம். உனக்கு அவன்மீது என்ன கொண்டி? இப்படியெல்லாம் அவதூறாகப் பேசுகிறாயே.

2. Ill-feeling, malice;
பகைமை. நான் உண்மையைச் சொன்னேன். அவன் மீதுள்ள கொண்டியினால் ஒன்றுங் கூறவில்லை.

3. Tale-bearing, back-biting;
புறங்கூறுகை..

DSAL


கொண்டி - ஒப்புமை - Similar