Tamil Dictionary 🔍

yae


எட்டாம் உயிரெழுத்து ; பெருக்கம் ; அடுக்கு ; மேல்நோக்குகை ; இறுமாப்பு ; உழையிசையின் எழுத்து ; எய்யும் தொழில் ; அம்பு ; பிரிநிலை , வினா , எண் , தேற்றம் , ஈற்றசை , இசைநிறை என்னும் பொருள்களில் வரும் ஓர் இடைச்சொல் ; விளிக்குறிப்பு ; இகழ்ச்சிக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருக்கம், ஏபெற்றாகும் (தொல். சொல். 305). 1. Increase, abundance; அடுக்கு. (தொல். சொல். 305, உரை.) 2. Pile, row, tier, series; மேனோக்குகை. கார்நினைந் தேத்தரு மயிற்குழாம் (சீவக. 87). 3. Looking upward; இறுமாப்பு. ஏக்கழுத்த நாணால் (பரிபா. 7, 55). 4. Pride, self-conceit, arrogance; உழையிசையின் அக்கரம். (திவா.) 5. Letter of the 4th note of the gamut usu. denoted by ; எய்யுந்தொழில். ஏமாண்ட நெடும்புரிசை (பு. வெ. 5, 5). 1. Shooting, as an arrow; அம்பு. ஏமுத லாய வெல்லாப் படைக்கலத்தொழிலு முற்றி (சீவக. 370). 2. Arrow; பிரிநிலை யேகாரம்: வினா வேகாரம். எண் ணேகாரம்: தேற்ற வேகாரம்: ஈற்றசை யேகாரம்: 1. Suffix having the force of (a) disjuction, as அவருள் அவனேசொன்னான்; (b) Interrogative, as நீயே கொண்டாய்; (c) Copulative, as நிலமே நீரே தீயே; (d) Emphasis, as in அதுமெய்யே; (e) Terminative expletive, as சென்னபட்டணத்திலே; இசைநிறை யேகாரம். (நன். 432.) 2. A poetic expletive for completing the metre, as ஏயே இவளொருத்தி பேடி; ஒரு விளிக்குறிப்பு. ஏயெம்பெருமான் (தேவா. 746, 7). 1. An exclamation inviting attention; ஓர் இகழ்ச்சிக்குறிப்பு. 2. An exclamation of contempt; எட்டாமுயிரெழுத்து. Eight letter and vowel of the Tamil alphabet, the half-close front tense unrounded vowel in Tamil;

Tamil Lexicon


s. increase, abundance, மிகுதி; 2. pile, row, அடுக்கு; 3. pride, arrogance, இறுமாப்பு.

J.P. Fabricius Dictionary


[ē ] . One of the seven long vowels, நெட்டுயிரிலொன்று. 2. An arrow, அம்பு. 3. A particle of emphasis, &c., இடைச்சொல். In நன்னூல், it is said to have six different uses: 1. பிரிநிலை, a distinguishing particle- as அவனேசொன்னான், it was he who said it. In some cases, it would be used for self or selves in the plural where the connection demanded it--as he himself said it. 2. வினா, interrogative: அவனேகொண் டான், was it he that bought it? 3. எண், enumeration or copulative--as சாத்தனே கொற்றனே இருவரும்வந்தார், Sattan and Kot tan both came; கடலே, கரையே, மரமே, மலரே, வளையே, இவ்வைந்து, the sea, the land, the tree, the flower, the conch, these five. 4. ஈற்றசை or அசைநிலை, a terminate expletive --as மல்லலோங்கெழில்யானைமருமம்பாய்ந்தொளித்த தே, (the weapon) lodged itself in the breast of the beautiful and powerful ele phant. 5. தேற்றம், certainty, confidence, ap peal, emphasis--as இதுள்ளதே, this is really true; முயற்குக்கோடில்லையே, the hare has no horns. 6. இசைநிறை, a poetic expletive for completing the metre--as ஏஏ இவ ளொருத்திபேடி, she is a hermaphrodite; பேடியோவென்றாரே, he said, is she an her maphrodite? To these the commentator adds 7. எதிர்மறை, negative as implied by the tones and inflections of the speaker rather than expressed by the particle--as அவன்வந்தானே, he came, did he? implying he did not come. Another may also be given. 8. இகழ்ச்சி, an interjection of con tempt--as எஏ--வைத்தியகாரா, oh, oh, (or fie, fie), thou stupid fellow. ''(p.)''

Miron Winslow



.
Eight letter and vowel of the Tamil alphabet, the half-close front tense unrounded vowel in Tamil;
எட்டாமுயிரெழுத்து.


n.
1. Increase, abundance;
பெருக்கம், ஏபெற்றாகும் (தொல். சொல். 305).

2. Pile, row, tier, series;
அடுக்கு. (தொல். சொல். 305, உரை.)

3. Looking upward;
மேனோக்குகை. கார்நினைந் தேத்தரு மயிற்குழாம் (சீவக. 87).

4. Pride, self-conceit, arrogance;
இறுமாப்பு. ஏக்கழுத்த நாணால் (பரிபா. 7, 55).

5. Letter of the 4th note of the gamut usu. denoted by ;
உழையிசையின் அக்கரம். (திவா.)


n. of ஏவு-
1. Shooting, as an arrow;
எய்யுந்தொழில். ஏமாண்ட நெடும்புரிசை (பு. வெ. 5, 5).

2. Arrow;
அம்பு. ஏமுத லாய வெல்லாப் படைக்கலத்தொழிலு முற்றி (சீவக. 370).


part.
1. Suffix having the force of (a) disjuction, as அவருள் அவனேசொன்னான்; (b) Interrogative, as நீயே கொண்டாய்; (c) Copulative, as நிலமே நீரே தீயே; (d) Emphasis, as in அதுமெய்யே; (e) Terminative expletive, as சென்னபட்டணத்திலே;
பிரிநிலை யேகாரம்: வினா வேகாரம். எண் ணேகாரம்: தேற்ற வேகாரம்: ஈற்றசை யேகாரம்:

2. A poetic expletive for completing the metre, as ஏயே இவளொருத்தி பேடி;
இசைநிறை யேகாரம். (நன். 432.)


int. cf. hē.
1. An exclamation inviting attention;
ஒரு விளிக்குறிப்பு. ஏயெம்பெருமான் (தேவா. 746, 7).

2. An exclamation of contempt;
ஓர் இகழ்ச்சிக்குறிப்பு.

DSAL


ஏ - ஒப்புமை - Similar