Tamil Dictionary 🔍

அழி

ali


கேடு ; வைக்கோல் ; வைக்கோலிடும் கிராதி ; கிராதி ; வண்டு ; மிகுதி ; வருத்தம் ; கழிமுகம் ; இரக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கேடு. அழிவந்த செய்யினும் (குறள்.807). 1. Ruin, destruction; வைக்கோல். உழுத நோன்பக டழிதின் றாங்கு (புறநா.125). 2. Straw; வைகோலிடுங் கிராதி. மாட்டுக்கு அழியில் வைக்கோல் இருக்கிறதா? cf. அளி. 3. Crib for straw; கிராதி. cf. அளி. 4. Lattice; மிகுதி. அற்றா ரழிபசி தீர்த்தல் (குறள், 226). 1. Excessiveness; வருத்தம். அழிதக மா அந்தளிர் கொண்ட போழ்தினான் (கலித். 143). 2, Pain; கழிமுகம். Nā. Place where the lagoon joins the sea; இரக்கம். அழிவரப் பாடிவருநரும் (புறநா.158). 5. Pity; வண்டு. அழிமல்கு பூம்புனலும் (தேவா. 78, 3.). Beetle; தவறுதல். நீயுரைத்த தொன்று மழிந்திலது. (கம்பரா.பிராட்டி.30). 3. To fail, to be frustrated;

Tamil Lexicon


II. v. i. perish, fall to dust, decay, கெடு; 2. fail, தவறு; 3. be defeated, தோல்; 4. swell, increase, பெருகு; 5. sympathise with, பரிவுகூர்; 6. be exhausted, spent, செலவு ஆகு. அழிகரு, அழிகுட்டி, an abortion. அழிம்பன், a spendthrift, a prodigal, a profligate. அழிம்பாய்ப் போக, அழிம்பாக, to be wasted. அழிம்பு, waste, damage, ruin, injury, act of injustice. சொத்து அழிய, wealth to be wasted. சீர் அழிய, to go out of order, செய லழிய, to become disabled தீரமழிய to lose courage; to be discouraged (உள்ளழிய). அழியாதது, incorruptible thing. அழியாமை, neg. v. n. incorruption. அழிவழக்கு, a very unjust law suit. அழிவு, (v. n.) ruin, decay, downfall. கற்பு அழியாத பெண், a virgin.

J.P. Fabricius Dictionary


, [aẕi] கிறேன், ந்தேன், வேன், அழிய, ''v. n.'' To decay, degenerate, perish, be corrupted, ruined, wasted, blighted, ef faced, obliterated, abolished, demolished, annihilated, கெட. 2. To fail (as a pro mise), be frustrated as a hope, &c., be refuted, தவற.

Miron Winslow


aḻi
n. அழி1-.
1. Ruin, destruction;
கேடு. அழிவந்த செய்யினும் (குறள்.807).

2. Straw;
வைக்கோல். உழுத நோன்பக டழிதின் றாங்கு (புறநா.125).

3. Crib for straw;
வைகோலிடுங் கிராதி. மாட்டுக்கு அழியில் வைக்கோல் இருக்கிறதா? cf. அளி.

4. Lattice;
கிராதி. cf. அளி.

5. Pity;
இரக்கம். அழிவரப் பாடிவருநரும் (புறநா.158).

aḻi
n. aḷi.
Beetle;
வண்டு. அழிமல்கு பூம்புனலும் (தேவா. 78, 3.).

aḻi
n. அழி-.
1. Excessiveness;
மிகுதி. அற்றா ரழிபசி தீர்த்தல் (குறள், 226).

2, Pain;
வருத்தம். அழிதக மா அந்தளிர் கொண்ட போழ்தினான் (கலித். 143).

aḻi
n. அழி-.
Place where the lagoon joins the sea;
கழிமுகம். Nānj.

DSAL


அழி - ஒப்புமை - Similar