முள்
mul
மரஞ்செடிகளில் கூர்மையுடையதாய்ச் சிறுகுச்சிபோற் காணப்படும் பகுதி ; குத்தக்கூடிய கூர்மையுடைய பொருள் ; தாற்றுக்கோல் ; கடிவாளம் ; இறகினடி ; முள்வடிவாகச் செய்யப்பட்ட கருவி ; துலாக்கோலின் நடுவில் சமனிலையைக் காட்டும் ஊசி ; கடிகாரத்தில் காலத்தைக் காட்டும் ஊசி ; கூர்மை ; நுண்மை ; புறாவின் ஆண்குறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரஞ்செடிகளில் கூர்மையுடையதாய்ச் சிறு குச்சிபோற்காணப்படும் பகுதி. இளைதாக முண்மரங் கொல்க (குறள், 879). 1. Thorn, brier, thistle, bristle, spine; குத்தக்கூடிய கூர்மையுடைய பொருள். 2. Anything sharp or pointed, as fish-bone, porcupine's quill, etc.; தாற்றுக்கோல். முள்ளிட் டூர்மதி வலவ (ஐங்குறு. 481). 3. Goad, spur; கடிவாளம். முள்ளுறீஇச் செய்கறி றாய்ந்தன (சீவக. 2214). 4. Bit; இறகினடி. இதன் முட் செந்நனை (அகநா. 23). 5. Quill or springing point of feather; பலாக்காய்மேற் காணப்படும் கூரிய முனைகள். (W.) 6. The rough points on the rind of the jack fruit; முள்வடிவாகச் செய்யப்பட்ட கருவி. 7. Fork; sharp-pointed instrument; தராசுக் கோலின் நடுவில் சமநிலையைக் காட்டும் ஊசி. 8. Index of a balance; கடிகாரத்தில் காலத்தைக் காட்டும் ஊசி. Mod. 9. Hand of a clock or time-piece; புறாவின் ஆண்குறி. Loc. 10. Male organ of a pigeon; கூர்மை. முள்வாய்ச் சங்கம் (சிலப். 4, 78). 11. Sharpness; நுண்மை. (சூடா.) 12. Minuteness;
Tamil Lexicon
[muḷ ] --முள்ளு, ''s.'' A thorn, a brier, a thistle, a bristle, கண்டகம். 2. A fish-bone, a cockspur, மீன்முள். 3. A fork or other sharp pointed instrument, முட்கருவி. 4. A por cupine's quill or spine, பன்றிமுள். 4. Index of a balance, தராசுமுள். 6. The quill or springing points of small feathers, இறகு முள். 7. The roughness or points on the skin of jack-fruit, பலாமுள். 8. Minuteness, நுண்மை. முள்ளுமேற்சீலைபோட்டால்மெள்ளமெள்ளவாங்க வேண்டும். The cloth spread on a thorn bush must be taken off with care; ''manage a dangerous business prudently.'' முள்ளின்மேல்நிற்கிறான். He stands on thorns. முள்ளிட்டுமுள்ளாராய்கிறது. Searching out a thorn with a thorn. வேலிக்குப்போட்டமுள் காலுக்குவினையாயிற்று..... The thorns of the hedge have become hurtful to the feet; ''i. e.'' One who was a help has become a hinderance.
Miron Winslow
muḷ
n. [T. K. M. muḷḷu Tu. muḷ.]
1. Thorn, brier, thistle, bristle, spine;
மரஞ்செடிகளில் கூர்மையுடையதாய்ச் சிறு குச்சிபோற்காணப்படும் பகுதி. இளைதாக முண்மரங் கொல்க (குறள், 879).
2. Anything sharp or pointed, as fish-bone, porcupine's quill, etc.;
குத்தக்கூடிய கூர்மையுடைய பொருள்.
3. Goad, spur;
தாற்றுக்கோல். முள்ளிட் டூர்மதி வலவ (ஐங்குறு. 481).
4. Bit;
கடிவாளம். முள்ளுறீஇச் செய்கறி றாய்ந்தன (சீவக. 2214).
5. Quill or springing point of feather;
இறகினடி. இதன் முட் செந்நனை (அகநா. 23).
6. The rough points on the rind of the jack fruit;
பலாக்காய்மேற் காணப்படும் கூரிய முனைகள். (W.)
7. Fork; sharp-pointed instrument;
முள்வடிவாகச் செய்யப்பட்ட கருவி.
8. Index of a balance;
தராசுக் கோலின் நடுவில் சமநிலையைக் காட்டும் ஊசி.
9. Hand of a clock or time-piece;
கடிகாரத்தில் காலத்தைக் காட்டும் ஊசி. Mod.
10. Male organ of a pigeon;
புறாவின் ஆண்குறி. Loc.
11. Sharpness;
கூர்மை. முள்வாய்ச் சங்கம் (சிலப். 4, 78).
12. Minuteness;
நுண்மை. (சூடா.)
DSAL