பயில்தல்
payilthal
payil-,
3 v. intr.
1. To become trained, accustomed;
தேர்ச்சியடைதல்.
2. To gain acquaintance, move as friends;
பழகுதல். பயிறொறும் பண்புடையாளர் தொடர்பு (குறள், 783).
3. To occur, take place;
நிகழ்தல்.
4. To be colse, thick, crowded;
நெருங்குதல். பயிலிதழ் மலர் (கலித். 103).
5. To join, unite;
பொருந்துதல்.
6. To behave, conduct oneself;
ஒழுகுதல்.
7. To roam about;
நடமாடுதல். நந்தி நந்தினி பயிலுகின்ற பேரொலி (தணிகைப்பு. அகத். 103).
8. To stay, abide, reside; to haunt;
தங்குதல். புலவர் பயிலுந் திருப்பனையூர் (தேவா. 635, 6). --tr.
1. To practice, learn by practise, as an art;
கற்றல். (திவா.) படைக்கலம் யாவும்... மாதவன் வயிற் பயில் வரதன் (பாரத. வாரணா. 29).
2.To speak, utter, tell, talk;
சொல்லுதல்.
payil-,
3 v. cf. பயிர்1-. intr
To utter indistinct sounds, as birds; to sound;
ஒலித்தல். (பிங்.) பொழில் குயில் பயிறருமபுரம் (தேவா. 535, 1) --tr.
To call;
அழைத்தல். பேடையைப் பயிலுங் குயில் (கம்பரா. வனம்புகு. 45).
DSAL