நிமிர்
nimir
நிமிரு, II. v. i. rise, stand straight, become erect, உயரு; 2. grow, வளரு; 3. be close, thick or crowded, நெருங்கு; 4. be bold, decided, இறுமா; 5. (fig.) be proud, affected, arrogant. வயிறு நிமிரப் பிடித்தான், he ate to the full. நிமிர்ந்த ஆள், a grown person; 2. a bold or proud man. நிமிர்ந்திருக்க, to raise or hold the head erect. நிமிர்ந்து நடக்க, to walk erect. நிமிர்ந்து நிற்க, to stand erect, to assert one's right with courage. நிமிர்ந்துபார்க்க, to look with the head erect, to regard.
J.P. Fabricius Dictionary
2. nimiru- நிமிரு stand straight, erect; look up
David W. McAlpin
nimir-,
4 v. intr. [K. nimir.]
1. To become erect; to be straightened; to stand upright; to raise or hold the head erect;
உயர்தல். (சூடா.)
2. To be out-stretched, as the arm;
நீளுதல். திரையெனு நிமிர்கையால் (கம்பரா. கங்கை. 62).
3. To grow tall, as youth; to increase in height; to shoot up;
வளர்தல். ஓங்கி யழலாய் நிமிர்ந்தாய் போற்றி (தேவா. 1160, 5).
4. To exceed the limit, as a foot in verse;
ஏறுதல். அம்மை தானே யடிநிமிர் பின்றே (தொல். பொ. 547).
5. To extend, expand, spread out;
பரத்தல். உரைகுறுக நிமிர் கீர்த்தி (கம்பரா. குலமுறை. 4).
6. To bend, shake;
நுடங்குதல். மின்னுநிமிர்ந் தனையராகி (மதுரைக். 679).
7. To walk, proceed;
நடத்தல். கடற்றானை யொன்னார் நடுங்க வுலாய்நிமிரின் (பு. வெ. 7, 5).
8. To run;
ஓடுதல். (சூடா.)
9. To be excessive;
மிகைத்தல். நிமிர்பரிய மாதாங்கவும் (புறநா. 14).
10. To be far, distant;
தூரமாதல். நணுகவு நிமிரவு நடக்கு ஞானத்த ருணர்வினின் (கம்பரா. கடிமண. 60).
11. To be of superior quality, as gold;
உயர்ந்ததாதல். நிமிர்பொன் சொரியும் வரையே (சீவக. 1376).
12. To be close, thick, crowded;
நெருங்குதல். (W.)
13. To be bold, firm, decided;
உறுதியாதல். காரியத்தில் நிமிர்ந்து நிற்கிறான். (W.)
14. To be proud, affected, arrogant;
இறுமாத்தல். (W.)
15. To be active, make an effort;
முயலுதல். இசைச்சொ லளவைக் கென்னா நிமிராது (மணி. 11, 81).
16. To return from retrograde motion, as a planet;
கிரகம் வக்கிரித்துத் திரும்புதல். (W.)
DSAL