நாள்
naal
தினம் ; காலம் ; வாழ்நாள் ; நல்ல நாள் ; காலை ; முற்பகல் ; நட்சத்திரம் ; திதி ; புதுமை ; அன்றலர்ந்த பூ ; வெண்பாவின் ஈற்றடியிறுதியில் வரும் ஒரசைச்சீர் வாய்பாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெண்பாவின் ஈற்றடியிறுதியில்வரும் ஓரசைச்சீர் வாய்ப்பாடு. (காரிகை, உறுப். 4.) 12. A symbolic expression one of the last metrical foot of one syllable, in veṇpā verse; தினம். சாதலொருநா ளொருபொழுதைத் துன்பம் (நாலடி, 295). 1. [T. nādu, M. nāḷ.] Day of 24 hours; காலம். பண்டைநாள் (கம்பரா. நட்பு. 43). 2. [T. nādu, M. nāḷ.] Time; ஆயுள். நாளோடு வாள்கொடுத்த நம்பன் றன்னை (தேவா. 219, 10). 3. Lifetime; life; நல்ல நாள். நாட்கேட்டுக் கல்யாணஞ் செய்து (நாலடி, 86). 4. Auspicious day; காலை. நாண்மோர் மாறும் (பெரும்பாண். 160). 5. Early dawn; முற்பகல். நாணிழற்போல விளியுஞ் சிறியவர் கேண்மை (நாலடி, 166). 6. Forenoon; நட்சத்திரம். திங்களு நாளு முந்துகிளந் தன்ன (தொல். எழுத். 286). 7. Lunar asterism; புஷ்பம். (தக்கயாகப். 68, உரை.) Flower; இளமை. நௌவி நாண்மறி (குறுந். 282). 10. Youth juvenility, tenderness; அன்றலர்ந்த பூ. பொன்குறையுநாள் வேங்கை நிழலுள் (திணைமாலை. 31). 11. Newblown flower; புதுமை. கோதையை நாணீராட்டி (சிலப் 16, 8). 9. Freshness, newness; திதி. (W.) 8. Lunar day, period of the moon's passage through an asterism;
Tamil Lexicon
s. a day of 24 hours or 6 Indian நாழிகை, தினம்; 2. time in general; 3. an auspicious day; 4. a lunar asterism, நட்சத்திரம்; 5. adj. new as in நாண்மலர் (நாள்+மலர்), நாட்பூ etc. அறுப்பு வர இன்னம் வெகுநாள் இருக் கிறது, (பிடிக்கும், செல்லும்), the harvest will be still a long time hence. இது அதுக்கு நாளன்று, this is not the proper time for it. பிள்ளை நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்தது, the child has been brought up sumptuously. நாடோறும், daily, always. நாட்கடத்த, to put off from day to day; 2. to pass away time. நாட்கால், the first post of the wedding shed or of a new building, set up on an auspicious day. நாட்கூலி, daily hire. நாளடைவில், நாளடைவிலே, (adv.) daily. நாளறுதி, passing away of a term; 2. gradually. நாளாக, to pass away as time. அவன் வந்து வெகு நாளாகிறது, it is a long time since he came. நாளாகமம், a chronicle, annals. நாளுக்குநாள், from day to day, from time to time. நாளைய, adj. now-a-days, modern. நாளொன்றுக்கு, for each day. நாளொன்றுக்கு ஒவ்வொரு பணம், a fanam a day. நாள்கழிய, as நாள்போக. நாள் (நாட்) செல்ல, to pass a time. நாள்தள்ள, to pass one's days (overcoming all difficulties). நாள்தோறும், same as நாடோறும். நாள் (நாட்) பட, to last, to endure, to continue, to become old. நாள்பட நிற்க, to last long. நாள்பட்ட வியாதி, a chronic long-standing disease. நாள், (நாட்), பார்க்க, to find an auspicious day. நாள்போக, to pass away as time. நாள்வட்டத்தில், நாளாவட்டத்தில், நா ளா சிறுதில், in course of time. அந்நாளிலே, in those days. நெடுநாளிருக்கிற சீவன்கள், long-lived creatures. பலநாள் செய்தி, a history of many years. மறுநாள், மற்றாநாள், the next day.
J.P. Fabricius Dictionary
naa(Lu) நாளு day (24 hour period); time
David W. McAlpin
, [nāḷ] ''s.'' [''Gen.'' நாளின், ''acc.'' நாளை, ''poet.'' நாளினை.] A day of twenty-four hours, a natural day, from sun rise to sun rise, இராப்பகல்கொண்டபொழுது. 2. Time in gene ral, காலம். 3. An auspicious day, பெரு நாள். 4. A lunar asterism. See நட்சத்தி ரம். ''(c.)'' 5. A lunar or astrological day; the period of the moon's passage through an asterism, சந்திரனாள். 6. The name of a metrical foot of the class. அசைச்சீர். 7. ''adj.'' New, as நாட்பூ--''Note.'' In combina tion, the last letter is changed by rule. நாளொருவண்ணமும்பொழுதொருமேனியுமாய்வளர் ந்துவிட்டது. It has grown every day and every hour. நாள்வாய்பெறினும். Even in the early part of the day. ''(p.)'' இதுஅதுக்குநாளல்ல. This is not the pro per time or season.
Miron Winslow
nāḷ,
n.
1. [T. nādu, M. nāḷ.] Day of 24 hours;
தினம். சாதலொருநா ளொருபொழுதைத் துன்பம் (நாலடி, 295).
2. [T. nādu, M. nāḷ.] Time;
காலம். பண்டைநாள் (கம்பரா. நட்பு. 43).
3. Lifetime; life;
ஆயுள். நாளோடு வாள்கொடுத்த நம்பன் றன்னை (தேவா. 219, 10).
4. Auspicious day;
நல்ல நாள். நாட்கேட்டுக் கல்யாணஞ் செய்து (நாலடி, 86).
5. Early dawn;
காலை. நாண்மோர் மாறும் (பெரும்பாண். 160).
6. Forenoon;
முற்பகல். நாணிழற்போல விளியுஞ் சிறியவர் கேண்மை (நாலடி, 166).
7. Lunar asterism;
நட்சத்திரம். திங்களு நாளு முந்துகிளந் தன்ன (தொல். எழுத். 286).
8. Lunar day, period of the moon's passage through an asterism;
திதி. (W.)
9. Freshness, newness;
புதுமை. கோதையை நாணீராட்டி (சிலப் 16, 8).
10. Youth juvenility, tenderness;
இளமை. நௌவி நாண்மறி (குறுந். 282).
11. Newblown flower;
அன்றலர்ந்த பூ. பொன்குறையுநாள் வேங்கை நிழலுள் (திணைமாலை. 31).
12. A symbolic expression one of the last metrical foot of one syllable, in veṇpā verse;
வெண்பாவின் ஈற்றடியிறுதியில்வரும் ஓரசைச்சீர் வாய்ப்பாடு. (காரிகை, உறுப். 4.)
nāḷ
n.
Flower;
புஷ்பம். (தக்கயாகப். 68, உரை.)
DSAL