Tamil Dictionary 🔍

நடை

natai


காலாற் செல்லுகை ; பயணம் ; அடி வைக்குங் கதி ; வாசல் ; இடைகழி ; ஒழுக்கம் ; வழக்கம் ; நீண்டநாள் ; நடைகூடம் ; இயல்பு ; அடி ; கூத்து ; தொழில் ; செல்வம் ; ஒழுக்கநூல் ; நித்தியபூசை ; கோயில் ; கோள் முதலியவற்றின் கதி ; கப்பல் ஏறும் வழி ; மொழியின் போக்கு ; வாசிப்பின் நோட்டம் ; தடவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலாற் செல்கை கோலுன்றிச் சோர்ந்த நடையினராய் (நாலடி). 1. Walk, act of walking; பாஷையின் போக்கு. ஒன்றல்லவை பல தமிழ்நடை (காரிகை. செய். 4, உரை). 11. Style in language; நீண்ட நாள். நடைப்பிணியா யிருக்கிறான். Tinn. 22. Long time; தடவை. 21. Turn time; கோயில். (T.A. S. iv, 8). 20. Temple; நித்தியபூசை. நடையும் விழவொடு நாடொறு மல்குங் கமுமலத்துள் (தேவா. 152, 8). 19. Daily worship in a temple; ஒழுக்கநூல். நன்றாக நடை பலவு நலின்றார்போலும் (தேவா. 722, 11). 18. Religious or moral treatise; செல்வம். (சூடா.) 17. Wealth; தொல். மாயோனிகளாய் நடைகற்ற வானோர் பலரும் முனிவரும் (திவ். திருவாய். 1, 5, 3). 16. Occupation; கூத்து. (சூடா.) 15. Dance, dancing; அடி. பகட்டா வீன்ற கொடுநடைக் குழவி (பெரும்பாண். 243). 14. Foot; இயல்பு. என்றுங் கங்குலா நடையதோரிடம் (சேதுபு. கந்தமா. 69). 13. Nature; வாசிப்பினோட்டம். (W.) 12. Fluency in reading; வழக்கம். 10. Custom, usage, fashion; ஒழுக்கம். நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே (புறநா. 312). 9. Conduct, behaviour, career; கப்பலேறும் வழி. 8. Gangway; இடை கழி அரக்கர் கிடைகளு நடைகளும் (இராமநா. சுந். 3). 7. Corridor, vestibule; வாசல். இனி நீ ஏன் நடையில் வந்து மிதிக்காதே. 6. Gate; வழி. (பிங்). 5. Way, route, road; அடிவைக்குங் கதி. விடைபொரு நடையினான் (கம்பரா எழுச்சி.10). 4. Gait, mode of walking or going, pace; பிரயாணம். 3. Journey; கிரகம் முதலியவற்றின் கதி. 2. Motion, course, as of a planet; நடைப்பந்தல். நடைநிழ லவைகெட (இரகு. திக்குவி. 82). Pandal erected throughout the route of a procession;

Tamil Lexicon


s. walk; நடப்பு; 2. pace, gait, mode of walking, ஒயில்; 3. turn, time (as in ஒரு நடை, once), முறை; 4. the entry of a house, passage, நடைகூடம்; 5. conduct, behaviour, ஒழுக்கம்; 6. style, idiom, usage, பாஷைநடை. சுறுக்கான நடையாய் நடக்க, to go at a quick pace. நடை நடையாய் நடந்தான், he repeatedly visited the place. படகு மூன்று நடை வந்தது, the boat has made three trips. நடைகாயம், a composition of vegetable stimulants given to a woman for some months after confinement. நடைகிணறு, -வாவி, -பாவி, a well with steps down. நடைக்காவணம், a shed for an idol to rest after the procession. நடைக்கு நடை, from turn to turn, from time to time. நடைக்கூடம், நடைகூடம், as நடை 4; 2. the vestibule of a palace. நடைசாரி, gentle pace of a horse; 2. walking for pastime, உலாவல்; 3. drums accompanying a procession, a great person etc., நடைசாரி மேளம். நடைபடி, same as நடபடி, act, conduct. நடைபழக்க, to break a horse. நடைப்படகு, a small boat kept for lading etc. நடைபார்க்க, -விட்டுப் பார்க்க, to see how the horse goes. நடை பாவாடை, cloth spread to walk on. நடைப்பரிகாரம், stores for travelling, பயணச்சாமான். நடைமருந்து, physic which does not confine one within doors. நடைமுதல், the current year. நடையன், a walker, a riding horse, a ploughing ox etc. நடையுடைபாவனை, (உடை நடை பாவனை), the mode of dress, the gait, the manner, external appearance. நடைவண்டி, a go-cart. நடைவீச்சு, velocity of one's walk. ஆள் நடை, a man's walk. கால் நடையாய் நடக்க, to go on foot. தெருவுநடை, the entry from the street (opp. to கொல்லைநடை).

J.P. Fabricius Dictionary


naTe நடெ walk, pace

David W. McAlpin


, [nṭai] ''s.'' Walk, act of walking, நடப்பு. 2. Gait, mode of walking or going, pace, ஒயில். 3. Journey, voyage பிரயாணம். 4. Turn, time or bout, as once, twice, &c., முறை. 5. Entrance to a house, commonly between two raised verandahs, நடைகூடம். 6. Conduct, behavior, course of actions, career, good or bad manners, ஒழுக்கம். 7. Fluency in reading, வாசிப்பினோட்டம். ''(c.)'' 8. Succession, series of letters in a word, words in a sentence, எழுத்துநடைசொல்நடை. 9. Style or usage in language, idiom, பா ஷைநடை. 1. Custom, usage, fashion, வாடிக் கை. 11. Properity, influence, செல்வம். 12. Way, road, route, வழி. 13. A dance, கூத்து. 14. Course of a planet, கிரகநடை 15. Passage, transit, progress, motion, செல்லுகை. நடைநடையாய்வந்தான். He came without delay. கால்நடையாய்ப்போனான். He went on foot. வண்டி பாரமேற்றிக்கொண்டுமூன்றுநடையாய்வந்தது. The wagon taking in a load went three times. அன்னநடைநடக்கப்போய்க்காகந்தன்னடையுங்கெ ட்டது. The crow affecting the gait of the Swan lost even its own gait; ''i. e.'' affecta tion is ridiculous.

Miron Winslow


naṭai,
n.நட-.
1. Walk, act of walking;
கலாற் செல்கை கோலுன்றிச் சோர்ந்த நடையினராய் (நாலடி).

2. Motion, course, as of a planet;
கிரகம் முதலியவற்றின் கதி.

3. Journey;
பிரயாணம்.

4. Gait, mode of walking or going, pace;
அடிவைக்குங் கதி. விடைபொரு நடையினான் (கம்பரா எழுச்சி.10).

5. Way, route, road;
வழி. (பிங்).

6. Gate;
வாசல். இனி நீ ஏன் நடையில் வந்து மிதிக்காதே.

7. Corridor, vestibule;
இடை கழி அரக்கர் கிடைகளு நடைகளும் (இராமநா. சுந். 3).

8. Gangway;
கப்பலேறும் வழி.

9. Conduct, behaviour, career;
ஒழுக்கம். நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே (புறநா. 312).

10. Custom, usage, fashion;
வழக்கம்.

11. Style in language;
பாஷையின் போக்கு. ஒன்றல்லவை பல தமிழ்நடை (காரிகை. செய். 4, உரை).

12. Fluency in reading;
வாசிப்பினோட்டம். (W.)

13. Nature;
இயல்பு. என்றுங் கங்குலா நடையதோரிடம் (சேதுபு. கந்தமா. 69).

14. Foot;
அடி. பகட்டா வீன்ற கொடுநடைக் குழவி (பெரும்பாண். 243).

15. Dance, dancing;
கூத்து. (சூடா.)

16. Occupation;
தொல். மாயோனிகளாய் நடைகற்ற வானோர் பலரும் முனிவரும் (திவ். திருவாய். 1, 5, 3).

17. Wealth;
செல்வம். (சூடா.)

18. Religious or moral treatise;
ஒழுக்கநூல். நன்றாக நடை பலவு நலின்றார்போலும் (தேவா. 722, 11).

19. Daily worship in a temple;
நித்தியபூசை. நடையும் விழவொடு நாடொறு மல்குங் கமுமலத்துள் (தேவா. 152, 8).

20. Temple;
கோயில். (T.A. S. iv, 8).

21. Turn time;
தடவை.

22. Long time;
நீண்ட நாள். நடைப்பிணியா யிருக்கிறான். Tinn.

naṭai
n. நட-.
Pandal erected throughout the route of a procession;
நடைப்பந்தல். நடைநிழ லவைகெட (இரகு. திக்குவி. 82).

DSAL


நடை - ஒப்புமை - Similar