Tamil Dictionary 🔍

தை

thai


ஓர் உயிர்மெய்யெழுத்து (த்+ஐ) ; ஒரு மாதம் ; பூசநாள் ; மகரராசி ; நாய்க்கடுகு செடி ; தையல் ; தாளக் குறிப்பினுள் ஒன்று ; அலங்காரம் ; மரக்கன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. The compound of த் and ஐ. தையலிடுதல். (சூடா.) 1. To sew, stitch; ஆணிமுதலியன அடித்தல். படத்திற்கு ஆணி தைத்தாயிற்றா? 2. To nail, fasten beams with nails, spikes or pegs; to pin; இலை முதலியன குத்தியிணைத்தல். 3. To plait or stitch, as leaves into plate; பொருத்துதல். பலகை தைத்து (பாரத. கிருட்டிண. 102). 4. To join; முண்முதலியன ஊடுருவுதல். மேனிதைத்த வேள்சரங்கள் (கம்பரா. உலாவியல். 15). 5. To pierce, penetrate, prick, as a thorn, an arrow; மாலைதொடுத்தல். தொடலை தைஇய மடவரன் மகளே (ஐங்குறு. 361). 6. To tie, weave, as a wreath; கோத்தல். அவிரிழை முத்தந்தைஇ மின்னுமிழ் பிலங்க (பதிற்றுப் 39, 15). 7. To string, as beads; அலங்கரித்தல். தைஇய மகளிர் (கலித். 27, 19). 8. To adorn, decorate; நிருமித்தல். வல்லவன் றைஇய பாவைகொல் (கலித். 56). 9. To make, create; பதித்தல். திகழொளி முத்தங்கரும்பாகத் தைஇ (கலித். 80, 4). 10. To set, enchase; இடுதல். திலகந்தைஇய தேங்கமழ் திருநுதல் (திருமுரு. 24). 11. To place, put, as a mark on the forehead; உடுத்துதல். ஏர்தழை தைஇ (கலித். 125, 12). 12. To wear, put on; சித்திரித்தல். அணிவரி தைஇயும் (கலித். 76, 2). 13. To paint; சூழ்தல். சீர்மிகு முத்தந் தைஇய நார்முடி (பதிற்றுப் 39, 16). 14. To surround, cover, encircle; வலைபின்னுதல். (W.) 15. To make a net; அடைத்தல். (யாழ். அக.)-intr. 16. To close, shut; உட்பிரவேசித்தல். அவ்வழித் தைத்தது பூதம் (கம்பரா. திருவவ. 88). 1. To enter, dart; மனத்திலுறைத்தல். அவன் சொன்னசொல் என் மனத்திற் றைத்தது. 2. To pierce the mind; to rankle; to cause pain; திருஷ்டி படுதல். (W.) 3. To alight, rest, as the fascinating looks of an unlucky person; அலங்காரம். தைபுனை மாது (நிகண்டு. Mss.). 1. Decoration, embellishment; தையல். (தைலவ. தைல.) 2. Sewing; ஒரு தாளக்குறிப்பு. (அரு. நி.) (Mus.) Onom, expr. of beating time; ஒரு மாதம். தைஇத்திங்கட் டண்ணிய தரினும் (குறுந்தொ. 196). 1. The 9th Tamil month, January-February; மகரராசி. 2. Capricorn in the zodiac; See பூசம். (சூடா.) 3. The 8th nakṣatra. மரக்கன்று. தைத்தெங்கு. Nāṉ. Young plant or tree; . See தைவேளை. (மூ. அ.)

Tamil Lexicon


s. January, தை மாதம்; 2. a sound in beating time, தாளக்குறிப்பு; 3. the 8th lunar asterism, பூரம்; 4. Capricorn of the Zodiac, மகரராசி. தேற்றார் , s. the ignorant, அறிவீனர்; 2. foes, பகைவர்.

J.P. Fabricius Dictionary


6. tey- தெய் sew, stitch, make (a dress, etc.)

David W. McAlpin


[tai ] . A syllabic letter, compounded of த் and ஐ.

Miron Winslow


tai.
.
The compound of த் and ஐ.
.

tai,
11 v. (M. taikka.)
1. To sew, stitch;
தையலிடுதல். (சூடா.)

2. To nail, fasten beams with nails, spikes or pegs; to pin;
ஆணிமுதலியன அடித்தல். படத்திற்கு ஆணி தைத்தாயிற்றா?

3. To plait or stitch, as leaves into plate;
இலை முதலியன குத்தியிணைத்தல்.

4. To join;
பொருத்துதல். பலகை தைத்து (பாரத. கிருட்டிண. 102).

5. To pierce, penetrate, prick, as a thorn, an arrow;
முண்முதலியன ஊடுருவுதல். மேனிதைத்த வேள்சரங்கள் (கம்பரா. உலாவியல். 15).

6. To tie, weave, as a wreath;
மாலைதொடுத்தல். தொடலை தைஇய மடவரன் மகளே (ஐங்குறு. 361).

7. To string, as beads;
கோத்தல். அவிரிழை முத்தந்தைஇ மின்னுமிழ் பிலங்க (பதிற்றுப் 39, 15).

8. To adorn, decorate;
அலங்கரித்தல். தைஇய மகளிர் (கலித். 27, 19).

9. To make, create;
நிருமித்தல். வல்லவன் றைஇய பாவைகொல் (கலித். 56).

10. To set, enchase;
பதித்தல். திகழொளி முத்தங்கரும்பாகத் தைஇ (கலித். 80, 4).

11. To place, put, as a mark on the forehead;
இடுதல். திலகந்தைஇய தேங்கமழ் திருநுதல் (திருமுரு. 24).

12. To wear, put on;
உடுத்துதல். ஏர்தழை தைஇ (கலித். 125, 12).

13. To paint;
சித்திரித்தல். அணிவரி தைஇயும் (கலித். 76, 2).

14. To surround, cover, encircle;
சூழ்தல். சீர்மிகு முத்தந் தைஇய நார்முடி (பதிற்றுப் 39, 16).

15. To make a net;
வலைபின்னுதல். (W.)

16. To close, shut;
அடைத்தல். (யாழ். அக.)-intr.

1. To enter, dart;
உட்பிரவேசித்தல். அவ்வழித் தைத்தது பூதம் (கம்பரா. திருவவ. 88).

2. To pierce the mind; to rankle; to cause pain;
மனத்திலுறைத்தல். அவன் சொன்னசொல் என் மனத்திற் றைத்தது.

3. To alight, rest, as the fascinating looks of an unlucky person;
திருஷ்டி படுதல். (W.)

tai,
n. தை-.
1. Decoration, embellishment;
அலங்காரம். தைபுனை மாது (நிகண்டு. Mss.).

2. Sewing;
தையல். (தைலவ. தைல.)

tai,
n.
(Mus.) Onom, expr. of beating time;
ஒரு தாளக்குறிப்பு. (அரு. நி.)

tai,
n. taiṣī. (M. tai.)
1. The 9th Tamil month, January-February;
ஒரு மாதம். தைஇத்திங்கட் டண்ணிய தரினும் (குறுந்தொ. 196).

2. Capricorn in the zodiac;
மகரராசி.

3. The 8th nakṣatra.
See பூசம். (சூடா.)

tai,
n.
Young plant or tree;
மரக்கன்று. தைத்தெங்கு. Nāṉ.

tai,
n.
See தைவேளை. (மூ. அ.)
.

DSAL


தை - ஒப்புமை - Similar