Tamil Dictionary 🔍

கொள்ளுதல்

kolluthal


koḷ-,
2.v. [T. konu, K. M. koḷ.] tr.
1. To seize, gras;
கையால் எடுத்துக் கொள்ளுதல். கொண்ட வாளொடும் (சீவக. 430).

2. To receive, as a gift;
பெறுதல். நல்லா றெனினுங் கொளறீது (குறள், 222).

3. To buy, purchase;
விலைக்கு வாங்குதல். கோதையினுங்கொள்வார் (நைடத. நகரப்.18).

4. To acquire, take possession of, occupy;
உரிமையாகக் கொள்ளுதல். விடலையைக் காணவோடி . . . வீதிகொண்டார் (சீவக. 457).

5. To marry;
விவாகம் செய்தல். தாங்கொண்ட மனையாளை (நாலடி, 3).

6. To abduct, carry off;
கவர்தல். மனையாளை மாற்றார்கொள (நாலடி, 3).

7. To contain, hold;
தன்னுட்கொள்ளுதல். சிதரரிக் கண்கொண்ட நீர் (நாலடி, 394).

8. To draw in, gather up;
முகத்தல். குணகடல் கொண்டு குடகடன் முற்றி (மதுரைக் 238).

9. To learn;
கற்றுக்கொள்ளுதல். கொள்ளுநர் கொள்ள (கல்லா. 11, 21).

10. To consider, think;
கருதுதல். யார்க்குங் கொடுத்தியெனக் கொள்கின்றிலம் (இலக். வி. 650, உரை).

11. To regard, esteem;
நன்குமதித்தல். கொளப்பட்டே மென்றெண்ணி (குறள், 699).

12. To celebrate;
கொண்டாடுதல். தண்பதங் கொள்ளுந் தலைநாட் போல (சிலப். 6, 160).

13. To accept, approve;
அங்கீகரித்தல். உய்ஞ்சனனிருத்தலு முலகங் கொள்ளுமோ (கம்பரா. உருக்கா. 17).

14. To adhere to, observe;
மேற்கொள்ளுதல். குடிப்பிறந்தார் குன்றா வொழுக்கமாக் கொண்டார் (நாலடி, 143).

15. To put up with, endure;
மனம் பொறுத்தல். (தொல். பொ. 147, உரை, பக். 658.)

16. To resemble;
ஒழித்தல். வண்டினம் யாழ்கொண்ட கொளை (பரிபா. 11, 125).--intr.

1. To suit, befit;
பொருந்துல். கொள்ளாத கொள்ளாதுலகு (குறள், 470).

2. To strike, hurt;
உடலிற் காயம்படுதல். கல்லுக் காலிற் கொண்டது. Loc.--aux.

3. An auxiliary which makes a verb reflexive, as in
அடித்துக்கொண்டான்; தற்பொருட்டில் வரும் ஒரு துனைவினை.--expl.

4. An expletive added to neg. imp. sing. verb, as in
அஞ்சாதேகொள்; எதிர்மறை ஏவலொருமை வினையொடு சேர்க்கப்படும் ஓர் அசை. (கலித். 115, உரை.)

DSAL


கொள்ளுதல் - ஒப்புமை - Similar