கொண்டுகூட்டு
kondukoottu
koṇṭu-kūṭṭu,
n. id. +. (Gram.)
Mode of construning a stanza in which words are appropriately transposed to arrive at the proper meaning, one of eight poruḷ-kōḷ, q.v.;
எண்வகைப் பொருள்கோளுள் செய்யுளின் அடிகள் பலவற்றிலும் உள்ள சொற்களைப் பொருளுக்கு ஏற்றவிடத்தில் எடுத்துக்கூட்டிப் பொருள்கொள்ளுமுறை. கோப்புடைமொழிகளை ஏற்புழியிசைப்பது கொண்டு கூட்டே (நன். 418).
DSAL