Tamil Dictionary 🔍

கொட்டம்

kottam


koṭṭam,
n. கொட்டு-.
1. Super-ciliousness, arrogance;
இறுமாப்பு. வேடர் கொட்டம தடங்க (தாயு. சிற்சு. 4).

2. [T. goṭṭu.] Mischievousness;
சேட்டை. கொட்டக்காரன்.

3. Petulance;
கடுகடுப்பு. Loc.

4. cf. ghōṣa. Roaring, trumpeting;
முழக்கம். கொட்ட மிடுங்கெசம் (இராமநா. பாலகா. 18).

5. Flowing, pouring;
நீர் முதலியன ஒழுகுகை. கொடுங்காற் குண்டிகைக்கொட்ட மேய்ப்ப (பெருங். உஞ்சைக். 43, 130).

6. [T. goṭṭamu, K. koṭṭa.] Hollow piece of bamboo for giving medicine to cattle;
மாடுகளுக்கு மருந்துகொதுக்கும் மூங்கிற்குழாய். Loc.

7. Spindle for twisting thread;
நூற்குங்கொட்டை. (சிறுபாணி.166, உரை.)

8. Small ola basket;
சிறிய ஓலைப்பெட்டி. கொழுங்குடி முசுண்டை கொட்டங்கொள்ளவும் (சிறுபாண். 166).

koṭṭam,
n. gōṣṭha.
Cattleshed;
மாட்டுதொழுவம். எருது நினைத்தவிடத்திற் கொட்டங்கடுவார்களா?

koṭṭam,
n. kuṣṭha [M. kōṭṭam.]
Costus root;
ஒருவகை வாசனைப்பண்டம். கொட்டமே கமழும் . . . மொய்குழல் (சீவக. 2575).

koṭṭam
n. House;
House;
வீடு. ஒரு கொட்டம் ஒழிச்சுக் குடுத்துருங்கோ (எங்களூர், 47).

DSAL


கொட்டம் - ஒப்புமை - Similar