கீரை
keerai
உணவுக்குப் பயன்படும் இலைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலைக்கறி. அங்குழைக் கீரை யடகுமிசையினும் (பு. வெ. 10, முல்லைப். 8). Greens, pot-herbs, vegetables;
Tamil Lexicon
s. greens, pot-herbs, vegetables, இலைக்கறி. கீரைக்காய், kakri melon, கக்கரிக்காய். கீரைகடைய, -மசிக்க, to mash potherbs to pulp. கீரைத்தண்டு, the stalk of greens. அகத்திக்கீரை, கலவைக்-, காட்டுக்-, குப்பைக்-, கோழிக்-, தண்டுக்-, புண் ணாக்குக்-, முள்ளிக்-, முன்னைக்-, sundry pot-herbs, கீரைநார்ப்பட்டு, a kind of silk. கீரைப்பாம்பு, கீரிப்பாம்பு, a worm bred in the intestines, நாக்குப்பூச்சி. கீரைமணி, tiny glass beads of various colours, worn on the neck by poor women and children. கீரைமணியட்டிகை, a woman's necklace made of tiny beads of gold. கீரைக்குத் தண்ணீரிறைத்தல், a game for amusing children, taking them by hands and feet and swinging them to & fro. அரைக்கீரை, greens that sprout again after being cut. இளங்கீரை, முளைக்கீரை, பிடுங்கு-, young greens. கலவைக்கீரை, greens mixed together. செங்கீரை, red greens. புளிச்சக்கீரை, sour pot-herb.
J.P. Fabricius Dictionary
, [kīrai] ''s.'' Pot-herbs, greens, vegetables, இலைக்கறி.
Miron Winslow
kīrai,
n. [T. K. kīre, M. cīra.]
Greens, pot-herbs, vegetables;
இலைக்கறி. அங்குழைக் கீரை யடகுமிசையினும் (பு. வெ. 10, முல்லைப். 8).
DSAL