Tamil Dictionary 🔍

கற்பு

katrpu


மகளிர் கற்பு ; களவுக்கூட்டத்துக்குப்பின் தலைவன் தலைவியை முறைப்படி மணந்து இல்லறம் புரியும் ஒழுக்கம் ; கற்பின் அடையாளமான முல்லை ; கல்வி ; தியானம் ; ஆணை ; கதி ; உறுதி ; புரிசை ; மதிலுண்மேடை ; நீதிநெறி ; கற்பனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதிவிரதா தருமம். வான்றரு கற்பின் (மணி. 22, 53). 1. Conjugal fidelity, chastity ; களவுக்கூட்டத்துக்குப்பின் தலைவன் தலைவியை விதிப்படி மணந்து இல்லறம்புரியும் ஒழுக்கம். (நம்பியகப். 26.) 2. (Akap.) Life of a house holder after his union with a bride of his choice had been ratified by marriage ceremonies ; முல்லை. (திவா.) 3. Malabar jasmine, an emblem of female chastity ; கல்வி. உலகந்தாங்கிய மேம்படு கற்பின் (பதிற்றுப். 59, 8). 4. Learning, study, knowledge ; தியானம். பல புவனமு நின்பாற் கற்புவைத்துய்ய (திருவிளை. மாயப். 29). 5. Meditation ; புரிசை. (அக. நி.) Fort wall; சங்கற்பம். நமனை ... நிறுத்துவனென்னுங் கற்பினான் (கம்பரா. கும்ப. 307). 1. Vow, decision, determination ; ஆணை. மறுவறு கற்பினில் ... ஆண்டு (கம்பரா. கிளைகண். 72). 2. Ordinance, command ; கதி. கண்டுவிடுவார்க் குண்டோ கற்பு (சைவச. பொது. 103). 3. Refuge; means of relieving distress ; . See கற்பா. (அக. நி.) வேலைப்பாடு. கற்பார்புரிசை (திவ். பெரியதி. 5, 1, 4). 6. Workmanship ;

Tamil Lexicon


s. (கல்) chastity, female virtue, conjugal fidelity, சுத்தம்; 2. fitness, propriety, முறைமை; 3. learning, knowledge, கல்வி; 4. meditation, தியானம்; 5. skill in work, workmanship, வேலைத்திறம்; 6. fortification, மதில். ஒரு பெண்ணைக் கற்பழிக்க or கற்புக் குலைக்க, to deflower or ravish a girl. கற்பழிந்த, (கற்புகுலைந்த) பெண், a deflowered woman. கற்பழியாத பெண், a virgin. கற்புக்காக்கிறவள், -உடையமகள், -அலங் காரி, a chaste woman or wife. கற்புடைமை, female chastity.

J.P. Fabricius Dictionary


முல்லை.

Na Kadirvelu Pillai Dictionary


, [kṟpu] ''s.'' Female virtue, conjugal fidelity, chastity, constancy, the virtue of a good wife, மகளிற்கற்பு. 2. ''(p.)'' Proprie ty, fitness, முறைமை. 3. Learning, study, knowledge, literature, information, intelli gence, கல்வி. 4. Destiny, divine ordina tion, விதி. 5. A raised area within a for tification, மதிலுண்மேடை. 6. A surround ing wall, a fortification, மதில். 7. The முல்லை flower shrub, regarded by poets as an emblem of female chastity. 8. Just ness, equity, moral rectitude, நீதிநெறி. 9. An ordinance, command, கற்பனை.

Miron Winslow


kaṟpu
n. கல்-.
1. Conjugal fidelity, chastity ;
பதிவிரதா தருமம். வான்றரு கற்பின் (மணி. 22, 53).

2. (Akap.) Life of a house holder after his union with a bride of his choice had been ratified by marriage ceremonies ;
களவுக்கூட்டத்துக்குப்பின் தலைவன் தலைவியை விதிப்படி மணந்து இல்லறம்புரியும் ஒழுக்கம். (நம்பியகப். 26.)

3. Malabar jasmine, an emblem of female chastity ;
முல்லை. (திவா.)

4. Learning, study, knowledge ;
கல்வி. உலகந்தாங்கிய மேம்படு கற்பின் (பதிற்றுப். 59, 8).

5. Meditation ;
தியானம். பல புவனமு நின்பாற் கற்புவைத்துய்ய (திருவிளை. மாயப். 29).

6. Workmanship ;
வேலைப்பாடு. கற்பார்புரிசை (திவ். பெரியதி. 5, 1, 4).

kaṟpu
n. krp.
1. Vow, decision, determination ;
சங்கற்பம். நமனை ... நிறுத்துவனென்னுங் கற்பினான் (கம்பரா. கும்ப. 307).

2. Ordinance, command ;
ஆணை. மறுவறு கற்பினில் ... ஆண்டு (கம்பரா. கிளைகண். 72).

3. Refuge; means of relieving distress ;
கதி. கண்டுவிடுவார்க் குண்டோ கற்பு (சைவச. பொது. 103).

kaṟpu
n. கல்.
See கற்பா. (அக. நி.)
.

kaṟpu
n.
Fort wall;
புரிசை. (அக. நி.)

DSAL


கற்பு - ஒப்புமை - Similar