Tamil Dictionary 🔍

ஏர்

yaer


உழுபடை , கலப்பை ; உழவுமாடு ; உழவுத்தொழில் ; எழுச்சி ; தோற்றப்பொலிவு ; அழகு ; நன்மை ; ஒப்பு ; ஓர் உவமவுருபு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏர்ச்சீர். (யாழ். அக.) Implements of husbandry; தோற்றப் பொலிவு. சீயமன்னா னிளமையும் வனப்பு மேரும் (சீவக. 1721). 7. Fine appearance, bearing; நன்மை. ஏரளவில்லா வளவினர் (திருக்கோ. 308). 9. Goodness; எழுச்சி. ஏருமெழிலுமென்றா (தொல். பொ. 247). 8. Development, growth; அழகு. கடனறிவார் முன்னின் றிரப்புமோ ரேஎ ருடைத்து (குறள், 1053). 6. Beauty; ஒருநாளி லுழக்கூடிய நிலம். 5. As much land as can be ploughed in a day; உழவு. ஏரினு நன்றா லெருவிடுதல் (குறள், 1038). 4. Ploughing, agriculture, as an occupation; உழவுமாடு. (சூடா.) 3. Yoke of oxen; ஒரு கலப்பையும் ஓரிணைமாடும். ஏருமிரண்டுளதாய் (தமிழ்நா. 60). 2. Team of oxen and the plough; கலப்பை. ஏரி னுழாஅ ருழவர் (குறள், 14). 1. Plough;

Tamil Lexicon


s. plough, கலப்பை; 2. a yoke of oxen, உழவு மாடு; 3. beauty, அழகு; 4. development, growth, வளர்ச்சி; 5. goodness, நன்மை. எத்தனை ஏருழுகிறான், அவனுக்கு எத்தனை ஏர் உழுகிறது, how many yoke of oxen has he, how many acres of arable land has he? ஏரடிக்க, ஏருழ, ஏரோட்ட, to plough. ஏராண்மை, tillage. ஏராளர், ploughmen, husbandmen; (also ஏரோர்.) ஏர்க்கால், the plough beam, the shaft of a carriage. ஏர்க்குண்டை, a yoke of oxen. ஏர்ச்சீர், implements of husbandry. ஏர்த்தொழில், agriculture. ஏர்ப்பூட்ட, to yoke the oxen to the plough. ஏர்வாரம், a share of the produce allowed for the team. ஓரிணையேர், a yoke of oxen. ஓரிணையேர்ப் பயிர், crops of land ploughed by a yoke of oxen; one acre of arable land. கயற்றேர், பின்னேர், the second or hindermost yoke of oxen. பொன்னேர்கட்ட, to plough for the first time on a lucky day in the season. முன்னேர் மாடு, முன்னேர்க்குண்டை, the first or best yoke of oxen.

J.P. Fabricius Dictionary


அழகு, உழுமாடு.

Na Kadirvelu Pillai Dictionary


, [ēr] ''s.'' A particle of comparison, உவ மையுருபு. 2. Beauty, அழகு. ''(p.)'' 3. A team for ploughing, including the plough and other apparatus, உழுபடை. 4. A yoke of oxen, உழவுமாடு. 5. Ploughing the plough- as an occupation, உழவுத்தொழில். அவனிருப்பதேர்க்காரன். He is a person pos sessed of twenty yoke of oxen. காம்பேர்தோள். Shoulders beautifully rounded like a bamboo. கயலேர்கண்ணார். Carp-eyed beauties--la dies with eyes as beautiful as the carp-fish. சீரைத்தேடினேரைத்தேடு. If you desire wealth attend to agriculture.

Miron Winslow


ēr
n. ஏர்-. [T. K. ēru, M. ēr.]
1. Plough;
கலப்பை. ஏரி னுழாஅ ருழவர் (குறள், 14).

2. Team of oxen and the plough;
ஒரு கலப்பையும் ஓரிணைமாடும். ஏருமிரண்டுளதாய் (தமிழ்நா. 60).

3. Yoke of oxen;
உழவுமாடு. (சூடா.)

4. Ploughing, agriculture, as an occupation;
உழவு. ஏரினு நன்றா லெருவிடுதல் (குறள், 1038).

5. As much land as can be ploughed in a day;
ஒருநாளி லுழக்கூடிய நிலம்.

6. Beauty;
அழகு. கடனறிவார் முன்னின் றிரப்புமோ ரேஎ ருடைத்து (குறள், 1053).

7. Fine appearance, bearing;
தோற்றப் பொலிவு. சீயமன்னா னிளமையும் வனப்பு மேரும் (சீவக. 1721).

8. Development, growth;
எழுச்சி. ஏருமெழிலுமென்றா (தொல். பொ. 247).

9. Goodness;
நன்மை. ஏரளவில்லா வளவினர் (திருக்கோ. 308).

ēr
n.
Implements of husbandry;
ஏர்ச்சீர். (யாழ். அக.)

DSAL


ஏர் - ஒப்புமை - Similar