Tamil Dictionary 🔍

உண்

un


உணவு. உண்விழைவார்க் கில்லை யுயிரோம்பல் (அறநெறிச். 115). Food;

Tamil Lexicon


V. & I. v. t. (fut. உண்பேன், உண்ணு வேன்), eat, suck, take food. Some times it serves to form a passive verb, as in தள்ளுண்ண, to be rejected. உண்ட சோற்றுக்கு, (வீட்டுக்கு) இரண்ட கம் பண்ணப்படாது, one should not prove false to one's benefactor. உணவு, உணா, உண்டி, ஊண், food. உணி, (contr. of உண்ணி) an eater; used as a termination denoting one who eats or suffers as இரப்புணி, அடியுணி, குத்துணி, உதையுணி, etc. உண்கலம், a plate, a dish. உண்டாட்டு, v. n. play, festivity. உண்ணீர், (உண்+நீர்) water to drink. உண்பிக்க, to cause to eat, to feed. உண்பனை, தின்பனை, eating together. குத்துண்ண, to be stabbed. சிற்றுண்டி, sweet-meats, refreshment between meals. பேருண்டி, principal meal, eating to excess. உண்ணாவிரதம் கொள்ள, to vow to fast. நசுக்குண்ண, to be crushed. கொலையுண்ண, to be killed. முலையுண்கிற குழந்தை, a sucking child.

J.P. Fabricius Dictionary


[uṇ ] --உண்ணு, கிறேன், உண்டே ன், உண்பேன் or உண்ணுவேன், உண்ண, ''v. a.'' To eat, drink, suck--as a child; to take food, whether solids, liquids or other kinds, to taste, அருந்த. 2. To feed, make a full meal --as a dinner, &c., புசிக்க. 3. To enjoy, suffer, experience, or receive the fruits of actions performed in former births, or in future the actions of the present, அனுபவிக்க. 4. To imbibe, absorb, விழுங்க.--''Note.'' With verbal roots and sometimes with verbal nouns it forms a passive--as அடியுண்ண, to be beaten; அலையுண்ண, to be distressed. உண்டசுற்றமுருகும். Relations or friends who have eaten together will cherish towards each other kindly feelings. உண்டசோற்றுக்கிரண்டகம்பண்ணப்படாது. One ought not to be ungrateful to his bene factor. உண்டார்மேனிகண்டாற்றெரியும். A person's diet may be known by his appearance. உண்ணக்கைசலிக்க. To be so delicate as to tire by eating--as a dainty child, &c. 2. To be wearied, cloyed, sated, &c. by too profuse a supply of food. உய்யாவினைப்பயனுண்ணுங்காலை. While expe riencing the inevitable fruits of former births.

Miron Winslow


uṇ
n. உண்-.
Food;
உணவு. உண்விழைவார்க் கில்லை யுயிரோம்பல் (அறநெறிச். 115).

uṇ-
7 v. tr.
1. To eat or drink; to suck, as a child; take food;
சாப்பிடுதல்.

2. To swallow without bitting;
உணவைக் கடியாது உட்கொள்ளுதல். (திவ். திருவாய். 6, 7, 1.)

3. To enjoy, experience;
அனுபவித்தல். மங்கைய ரிளநல மைந்த ருண்ண (கம்பரா. உண்டா. 63).

4. To draw in, receive;
உட்கொள்ளுதல். நதியுண்ட கடல் (தாயு. மலைவளர். 1).

5. To be fitted to;
பொருந்துதல். உறியுண்ட கரகத்தோடு (திருவிளை. யானையெய். 38).

6. To resemble;
ஒத்தல். சேலுண் கண்ணியர் (சீவக. 2383).

7. To seize, grasp;
கவர்தல். அவுணனா ருயிரை யுண்ட கூற்றினை (திவ். திருக்குறுந். 2).

8. To harmonise with, to be agreeable to; -aux. Used with vbl. bases and vbl. nouns to from the passive, as in கட்டுண்டான், கேடுண்டான்;
இசைவாதல். ஓசை யூட்டினு முண்ணாதவாறும் (யாப். வி. பக். 97.) செயப்பாட்டு வினைப்பொருள் உணர்த்தும் ஓரு விகுதி.

DSAL


உண் - ஒப்புமை - Similar