Tamil Dictionary 🔍

வாய்

vaai


உதடு அல்லது அலகு இவற்றினிடையிலுள்ள உறுப்பு ; பாண்டம் முதலியவற்றின் திறந்த மேற்பாகம் ; வாய்கொண்ட அளவு ; உதடு ; விளிம்பு ; ஆயுதத்தின் முனை ; மொழி ; வாக்கு ; குரல் ; மெய்ம்மை ; சிறப்பு ; சிறப்புடைய பொருள் ; வாசல் ; வழி ; மூலம் ; இடம் ; துலாக்கோலின் வரை ; தழும்பு ; துளை ; வாத்தியக்குழல் ; ஏழுனுருபு ; ஓர் உவமஉருபு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மொழி. வணங்கிய வாயினராத லரிது (குறள், 419). 7. Word; உதடு அல்லது அலகு இவற்றினிடையிலுள்ள உறுப்பு. (பிங்.) கயவர்வா யின்னாச் சொல் (நாலடி, 66). 1. Mouth; beak of birds; பாத்திரம் முதலியவற்றின் திறந்த மேற்பாகம். வாயில்லை நாமங்கள் செப்ப . . . முத்திபெற்ற தென்னோ தயிர்த்தாழியுமே (அஷ்டப். திருவரங். மாலை, 53). புண்வாய் கிழித்தன (பெருந்தொ. 701). 2. Mouth as of cup, bag, ulcer, etc.; வாய்கொண்ட வளவு. நாலுவாய் உண்டான். 3. Mouthful; உதடு. வாய்மடித்துரறி (புறநா. 298). (நாமதீப. 587.) 4. Lip; விளிம்பு. பொன்னலங்கல் . . . வாயருகு வந்தொசிந்து (சீவக. 595). 5. Edge, rim; ஆயுதத்தின் முனை. கூனிக் குயத்தின் வாய்நெல் லரிந்து (பொருந. 242). 6. Edge, as of a knife; வாக்கு. (அக. நி.) பண்டேயுன் வாயறிதும் (திவ். திருப்பா. 15). 8. Speech utterance; குரல். வாயுடை மறையவர் (திவ். நாய்ச். 1, 7). 9. Voice, tone; மெய்ம்மை. பொய்சேணீங்கிய வாய் நட்பினையே (மதுரைக். 198). (பிங்.) 10. Cf. வாய்-மை Truth; சிறப்பு. முறியினும் வாயது (குறுந். 62). 11. cf. வாய்ப்பு. Excellence; சிறப்புடைப் பொருள். மடவோன் காட்சி வாயன்று (ஞானா. 10). 12. cf. வாய்ப்பு. That which is excellent; வாசல். நரகவாய் கீண்டாயும் நீ (திவ். இயற். 3, 47). 13. Opening; gate; வழி. பெரியார்நூல் காலற்கு வாய்காப்புக் கோடல் வனப்பு (ஏலா. 23). 14. Way path; உபாயம். அது தணிக்கும் வாய்நாடி (குறள், 948). 15. Means; மூலம். தூதர்வாயிலிட்டு நீட்டுகையு மன்றிக்கே (ஈடு, 10, 10, ப்ர.). 16. Agency, instrumentality; இடம். கொக்கின் மென்பறைத் தொழுதி . . . எவ்வாயுங் கவர (நெடுநல். 17). 17. Place; துலாக்கோலின் வரை. (G. sm. D. I, i, 284.) 18. Graduated mark on a steelyard; தழும்பு. வாள்வாயுமின்றி வடிவெங்கணை வாயு மின்றி (சீவக. 454). 19. Scar; துவாரம். (யாழ். அக.) 20. Hole; orifice; வாத்தியக் குழல். (சூடா.)--part. 21. cf. வேய். Flute, musical pipe; ஏழனுருபு. (நன். 302.) கங்குல் வாய் (திவ். திருவாய். 5, 4, 7). 1. (Gram.) A sign of the locative case; ஒர் உவமவுருபு. தீவாய்செக்கர் (கல்லா. 42, 20). 2. A particle of comparison;

Tamil Lexicon


s. the mouth, வாக்கு; 2. a mouthful; 3. the opening or mouth of a bag, pot, cave, wound etc.; 4. place, இடம்; 5. lip or lips, உதடு; 6. a form of the 7th case, ஏழனுருபு; 7. truth, மெய்; 8. mode, manner, விதம்; 9. a word, சொல். வாயை மூடு, hold your tonge. கன்றுக்கு வாய்ப்பூட்டுபோட, to muzzle a calf. உனக்கு வாயெழவில்லையே, you cannot say a word, your mouth is stopped. ஒருவாய் சாதம், a mouthful of rice. வாயடிக்க, to chatter, to deny the fact or the debt. வாயடைக்க, to fail in speech as a dying person; 2. to confute an adversary. வாயலம்ப, to rinse the mouth. வாயாங்காரம், arrogance as displayed in one's speech, words of self-conceitedness. வாயாடி, வாயாடுகிறவன், a prattler; 2. an impertinent, quarrelsome fellow. வாயாவி, the breath of the mouth. வாயாவிபோக்க, to yawn, to speak vainly. வாயிலே போட்டுக்கொள்ள, to injure one by embezzling his property. வாயில் (வாயால்) எடுக்க, to vomit. வாயில்லாச்சீவன், dumb animals. வாயில்வந்தபடி திட்ட, to abuse as much as one's mouth could. வாயிழந்து கேட்க, to ask a favour of an inferior or of an equal. வாயுதவி, வாயுபகாரம், help by word of mouth. வாயுபசாரம், flattery, empty compliments. வாயுறைவாழ்த்து, admonition to young people who behave ill from their seniors (painful but useful). வாயூற, to water, to form or collect as saliva; 2. to flow from the mouth as spittle; 3. to water in the mouth for something nice to eat; 4. to long fame, learning, wealth or office. வாயெடுக்க, to begin to speak. வாய்கட்ட, to silence one; 2. to charm a snake of beast so as to prevent its biting; 3. to abstain from improper food when dieting. வாய்கிறுது, arrogant speech. வாய் கொடாமலிருக்க, to be unwilling, to exchange words. வாய்க்கட்டை, a gag for the mouth; 2. (in cant.) bribery. வாய்க் கணக்கு, mental arithmetic. வாய்க்கரிசி, a ceremony of putting rice into the mouth of a corpse before burning. வாய்க்காசு, money given to a witness; 2. the money cast with rice upon a corpse. வாய்க்காடி வார்த்துக் கொண்டிருக்க, to be very mournful or sorrowful. வாய்க்கால், water-course; 2. the 1th lunar mansion, மகநாள். வாய்க்காலுக்குப் போக, to go to ease nature. வாய்க்குள்ளே பேச, to mumble, to mutter. வாய்க் குற்றம், a verbal mistake or error. வாய்க் கூடை, -ப்புட்டில், -ப்பெட்டி, a small basket for muzzling a calf. வாய்க் கொழுப்பு, arrogance, insolence. வாய்க்கொழுப்பாய்ப் பேச, to boast, to talk insolently. வாய்ச் சாலகம், talkativeness. வாய்ச் சாலகன், an eloquent speaker, an orator. வாய்ச் சொலவு, prediction; 2. an ominous speech. வாய் நீர், vulg. வாணி, saliva, spittle. வாய் (வாய் நீர்) ஊற, to slaver. வாய்பாடு, (in gram.) a model, a speciman; a symbolic term for all roots of verb as செய்; 2. a symbolic expression in any art or science. வாய்புதைக்க, to shut the mouth with the palm of the hand, வாய்பொத்த. வாய்பூச, to wash the mouth; 2. bribe a superior; 3. to flatter. வாய்போட, to interrupt another when talking. வாய்ப்பட்டி, a chattering woman, a shrew. வாய்ப்பாடம், lesson learnt by heart. வாய்ப்பானை, a babbling fellow. வாய்ப்பிறப்பு, a saying, a declaration. வாய்ப்பூட்டு, a lock for the mouth, a gag used by anchorites. வாய்மட்டம், level to the brim. வாய்மதம், arrogant speech. வாய்மோசம், inadvertence in speech. வாய்வட்டம், a haltar to put round a horse's mouth. வாய்வழங்க, to promise; 2. to speak; 3. to eat, உண்ண. வாய்விசேஷமாய், verbally, by word of mouth. வாய்விட, -விட்டுச்சொல்ல, to speak freely; 2. to divulge secrets. வாய்விட்டழ, to roar or wail like a child. வாய்வெட்ட, -வெட்டுவெட்ட, to overcome in argument. சந்துவாய், the joint or place of joining boards etc. தூற்றுவாய், the windward side in winnowing.

J.P. Fabricius Dictionary


vaayi வாயி mouth, mouthful, opening of bag, etc.

David W. McAlpin


, [vāy] ''s.'' Mouth, வாக்கு. 2. A mouth ful, வாய்கொண்டது. 3. Mouth of a cup, a bag, a wound; the muzzle of a gun, &c., பற்றுவாய். 4. Lip, or lips, உதடு. 5. (நல்.) Place, இடம். 6. Manner, mode, ஏழனுருபு. 8. Truth, மெய். 9. A word, சொல். (சது.) அவனுக்குவாயாலும்வயிற்றாலும்போகிறது. He is both passing stools, and vomiting. வாயைமூடு. Hold your tongue. இன்னம்ஒருவாய்சாப்பாடு. Take a mouthful more. எனக்குவாயெழவில்லை. I cannot say a word. இதுகுரைகடல்வாயமுதென்கோ. Shall I call this the nectar of the roaring sea? ''(p.)'' குடத்தின்வாயைப்பிடியாதே. Do not take the pot by its mouth. சந்துவாய். The joint, or place of joining boards, &c. தூற்றுவாய். The wind-ward side in winnowing.

Miron Winslow


vāy,
cf. vāc. [T. vāyi, K. bāy, M. vāy.] n.
1. Mouth; beak of birds;
உதடு அல்லது அலகு இவற்றினிடையிலுள்ள உறுப்பு. (பிங்.) கயவர்வா யின்னாச் சொல் (நாலடி, 66).

2. Mouth as of cup, bag, ulcer, etc.;
பாத்திரம் முதலியவற்றின் திறந்த மேற்பாகம். வாயில்லை நாமங்கள் செப்ப . . . முத்திபெற்ற தென்னோ தயிர்த்தாழியுமே (அஷ்டப். திருவரங். மாலை, 53). புண்வாய் கிழித்தன (பெருந்தொ. 701).

3. Mouthful;
வாய்கொண்ட வளவு. நாலுவாய் உண்டான்.

4. Lip;
உதடு. வாய்மடித்துரறி (புறநா. 298). (நாமதீப. 587.)

5. Edge, rim;
விளிம்பு. பொன்னலங்கல் . . . வாயருகு வந்தொசிந்து (சீவக. 595).

6. Edge, as of a knife;
ஆயுதத்தின் முனை. கூனிக் குயத்தின் வாய்நெல் லரிந்து (பொருந. 242).

7. Word;
மொழி. வணங்கிய வாயினராத லரிது (குறள், 419).

8. Speech utterance;
வாக்கு. (அக. நி.) பண்டேயுன் வாயறிதும் (திவ். திருப்பா. 15).

9. Voice, tone;
குரல். வாயுடை மறையவர் (திவ். நாய்ச். 1, 7).

10. Cf. வாய்-மை Truth;
மெய்ம்மை. பொய்சேணீங்கிய வாய் நட்பினையே (மதுரைக். 198). (பிங்.)

11. cf. வாய்ப்பு. Excellence;
சிறப்பு. முறியினும் வாயது (குறுந். 62).

12. cf. வாய்ப்பு. That which is excellent;
சிறப்புடைப் பொருள். மடவோன் காட்சி வாயன்று (ஞானா. 10).

13. Opening; gate;
வாசல். நரகவாய் கீண்டாயும் நீ (திவ். இயற். 3, 47).

14. Way path;
வழி. பெரியார்நூல் காலற்கு வாய்காப்புக் கோடல் வனப்பு (ஏலா. 23).

15. Means;
உபாயம். அது தணிக்கும் வாய்நாடி (குறள், 948).

16. Agency, instrumentality;
மூலம். தூதர்வாயிலிட்டு நீட்டுகையு மன்றிக்கே (ஈடு, 10, 10, ப்ர.).

17. Place;
இடம். கொக்கின் மென்பறைத் தொழுதி . . . எவ்வாயுங் கவர (நெடுநல். 17).

18. Graduated mark on a steelyard;
துலாக்கோலின் வரை. (G. sm. D. I, i, 284.)

19. Scar;
தழும்பு. வாள்வாயுமின்றி வடிவெங்கணை வாயு மின்றி (சீவக. 454).

20. Hole; orifice;
துவாரம். (யாழ். அக.)

21. cf. வேய். Flute, musical pipe;
வாத்தியக் குழல். (சூடா.)--part.

1. (Gram.) A sign of the locative case;
ஏழனுருபு. (நன். 302.) கங்குல் வாய் (திவ். திருவாய். 5, 4, 7).

2. A particle of comparison;
ஒர் உவமவுருபு. தீவாய்செக்கர் (கல்லா

DSAL


வாய் - ஒப்புமை - Similar