Tamil Dictionary 🔍

மாத்திரை

maathirai


கணப்பொழுது ; கண்ணிமைத்தல் அல்லது கைந்நொடித்தல் அளவான காலம் ; செய்யுளில் வரும் எழுத்தொலியின் அளவு ; குற்றெழுத்து ; குருவிற்பாதி ; காலவிரைவு ; மிகச் சுருக்கமான இடம் ; குளிகை ; துறவியின் தண்டகமண்டலங்கள் ; பேறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்ணிமைத்தல் அல்லது கைந்நொடித்தலளவான காலம். கண்ணிமை நொடியென வவ்வே மாத்திரை (தொல். எழுத். 6). 2. The time of winking one's eyes or of snapping one's fingers; இசைச்சுரப் பகுதி. (திவா.) 2. (Mus.) Interval in the musical scale; quartertone; காதணிவகை. செம்பொன் மாத்திரை செரீஇய காதினர் (பெருங். மகத. 17, 157) 1. An ear-ornament; பாக்கியம். (யாழ். அக.) 11. Luck, fortune; துறவியின் தண்டகமண்டல முதலிய பொருள்கள். சந்யாசிகள் . . . மாத்திரை தொடக்கமானவற்றைக் கையிலே கூடக்கொண்டு திரிவார்களாயிற்று (ஈடு, 4,8,4). 10. Staff, water-bowl and other articles of ascetics; குளிகை. (அரு. நி.) 9. Medicinal pill; மிகச்சுருக்கமான இடம். அரை மாத்திரையி லடங்கு மடி (தேவா. 970, 7). 8. Minute portion of space; அளவு. மாத்திரையின்றி நடக்குமேல் (நாலடிஇ 242 ). 7. Measure, limit, as of time; காலவிரைவு. (பிங்.) 6. Swiftness of time; குருவிற்பாதி. (அரு. நி.) 5. A syllabic instant, half of kuru; குற்றெழுத்து. (யாழ். அக.) 4. Short vowel; செய்யுளில் வரும் எழுத்தொலியி அளவு. மாத்திரை யெழுத்தியல் (தொல். பொ. 313). 3. (Pros.) Mora or prosodial unit of sound; கணப்போது. சகமூன்றுமொர் மாத்திரை பார்க்கு மெங்கள் கண்ணவனார் (திருநூற். 25). 1. Moment, measure of time = 2/5 of a second = 1/60 nālikai;

Tamil Lexicon


s. a measure, quantity, அளவு; 2. a moment of time, கணம்; 3. medicinal pill, குளிகை. பேதி (விரோசன) மாத்திரை, a drastic pill. மாத்திரைக்கோல், a conjuror's wand.

J.P. Fabricius Dictionary


கணம், இமை, நொடி.

Na Kadirvelu Pillai Dictionary


, [māttirai] ''s.'' A medicinal pill, குளி கை. ''(c.)'' 2. Measure, அளவு. 3. Quantity in prosody, எழுத்தினளவு. 4. A moment of time. கணம். (See under இமை.) 5. Swiftness of time, காலவிரைவு. ''(Sa. Mattra.)''

Miron Winslow


māttirai
n. mātrā.
1. Moment, measure of time = 2/5 of a second = 1/60 nālikai;
கணப்போது. சகமூன்றுமொர் மாத்திரை பார்க்கு மெங்கள் கண்ணவனார் (திருநூற். 25).

2. The time of winking one's eyes or of snapping one's fingers;
கண்ணிமைத்தல் அல்லது கைந்நொடித்தலளவான காலம். கண்ணிமை நொடியென வவ்வே மாத்திரை (தொல். எழுத். 6).

3. (Pros.) Mora or prosodial unit of sound;
செய்யுளில் வரும் எழுத்தொலியி அளவு. மாத்திரை யெழுத்தியல் (தொல். பொ. 313).

4. Short vowel;
குற்றெழுத்து. (யாழ். அக.)

5. A syllabic instant, half of kuru;
குருவிற்பாதி. (அரு. நி.)

6. Swiftness of time;
காலவிரைவு. (பிங்.)

7. Measure, limit, as of time;
அளவு. மாத்திரையின்றி நடக்குமேல் (நாலடிஇ 242 ).

8. Minute portion of space;
மிகச்சுருக்கமான இடம். அரை மாத்திரையி லடங்கு மடி (தேவா. 970, 7).

9. Medicinal pill;
குளிகை. (அரு. நி.)

10. Staff, water-bowl and other articles of ascetics;
துறவியின் தண்டகமண்டல முதலிய பொருள்கள். சந்யாசிகள் . . . மாத்திரை தொடக்கமானவற்றைக் கையிலே கூடக்கொண்டு திரிவார்களாயிற்று (ஈடு, 4,8,4).

11. Luck, fortune;
பாக்கியம். (யாழ். அக.)

māttirai
n. mātrā.
1. An ear-ornament;
காதணிவகை. செம்பொன் மாத்திரை செரீஇய காதினர் (பெருங். மகத. 17, 157)

2. (Mus.) Interval in the musical scale; quartertone;
இசைச்சுரப் பகுதி. (திவா.)

DSAL


மாத்திரை - ஒப்புமை - Similar