Tamil Dictionary 🔍

பத்திரம்

pathiram


இலை ; புத்தகத்தின் ஏடு ; இலை போன்ற தகடு ; ஓர் அணிகலன் ; சாசனம் ; திருமுகம் ; பூவிதழ் ; இறகு ; அம்பு ; சிறுவாள் ; அழகு ; அழகிய உருவம் ; கவனம் ; நன்மை ; பாதுகாப்பு ; நலம் ; யானைவகை ; மலை ; பீடத்திலுள்ள எழுதகவகை ; காண்க : பத்திரலிங்கம் ; குதிரைப்பந்தி ; நவ வருடத்துளொன்று ; காண்க : பத்திராச(த)னம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புத்தகத்தினேடு. எதிர்போயேறும் பத்திரம் வென்றதாக (திருவாலவா. 38, 24). 2. Palm leaf of a book; இலைபோன்ற தகடு. பைம்பொற் பத்திரம் (பெருங். மகத. 5, 51). 3. Plate in the form of leaf; ஓர் ஆபரணம். வெண்கலப் பத்திரங்கட்டி விளையாடி (திவ். பெரியாழ். 1, 9, 5). 4. A leaf-like ornament; சாஸனம். 5. Written document, bond, deed, order; திருமுகம். பத்திரங் கொடுத்தொதுங்கிப் பத்திரன் பணிந்து நின்றான் (திருவாலவா. 55, 19). 6. Letter, epistle, note, ola; பூவிதழ். (W.) 7. Flower petal; இறகு. (பிங்.) 8. Wing, feather, plumage; அம்பு. (பிங்.) துன்று பத்திர மாயிரம் வாசவன் றுரப்ப (குற்றா. தல. 14, 39). 9. Arrow; இலை. பத்திரங்கொண் டருச்சித்தே (வெங்கைக்கோ. 120). 1. Leaf; சிறுவாள். (பிங்.) பத்திரம் புரை நாட்டம் (கம்பரா. ஊர்தே. 170). 10. Small sword; அழகு. (பிங்.) 1. Beauty, grace; அழகிய உருவம். பத்திரமணிந்த சித்திரக்கதவின் (பெருங். இலாவாண. 2, 66). 2. Beautiful figures, as carved on a door; கவனம். சாமான்களைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள். 3. Caution, carefulness, circumspection; நன்மை. (சூடா.) பத்திரக்கடிப்பு (சீவக. 2276). 4. Goodness; பாதுகாப்பு. பத்திரச் சிறைகளை விரிக்கும் பண்பினான் (கம்பரா. சடாயுவுயிர். 91). 5. Safety, security; சௌக்கியம். ஊரில் எல்லாரும் பத்திரமா? 6. Good state of health, welfate; யானைவகை. பத்திரப் பெயர்ப் பருத்தகைச் சிறுத்தகட் பாய்மதப் பரூஉப்பக டனையான் (பாரத. பதினெட்டாம். 31). 7. A kind of elephant; மலை. (பிங்.) பத்திரத் தலையென (கம்பரா. கரன். 80). 8. Hil, mountain; பீடத்திலுள்ள எழுதகவகை. நடுவு பத்திரம் உடைத்தாய் நின்ற பீடம் ஒன்று. (S. I. I. ii, 222). 9. A kind of moulding in a pedestal; . 10. See பத்திரவருடம். (சிவதரு. கோபுர. 53). . 11. See பத்திராசனம். ஆதன நூற்றெட்டவை பதுமம் பத்திரம் (தத்துவப். 107). . 12. See பத்திரலிங்கம். (சைவச. பொது. 127.) குதிரைப் பந்தி. (அக. நி.) 13. Horse-stable;

Tamil Lexicon


s. a leaf, இலை; 2. a leaf of a book ஏடு; 3. a letter, a bond, a deed, சீட்டு; 4. caution, care, security, சாக் கிரதை; 5. firmness, safety, உறுதி; 6. a dagger, உடைவாள்; 7. one of the postures of the silent devotee; 8. beauty, handsomeness, grace, அழகு; 9. a hill, a mountain; 1. wing, feather, plumage, சிறகு; 11. an arrow, அம்பு. பத்திரம், take care, be careful, keep safe. பத்திரப்படுத்த, பத்திரம் பண்ண, to secure, to keep in custody. பத்திரமாகப் பார்க்க, பத்திரமாய்ப் பார்க்க, to take good care of. பத்திராசனம், a throne, சிங்காசனம். பத்திராசனர், one of the classes of angels or heavenly inhabitants; 2. enthroned angels. அதிகாரப்பத்திரம், power of attorney.

J.P. Fabricius Dictionary


, [pattiram] ''s.'' Letter, epistle, note, tract, ''commonly,'' any written document, bond, deed, order, &c., சீட்டு. 2. Leaf, இலை. ''(c.)'' 3. Leaf of a book, புத்தகத்தினேடு. 4. Petal of a flower பூவிதழ். 5. Wing, feather, plu mage, சிறகு. 6. Feathers of an arrow, அம் பினிறகு. 7. Arrow, அம்பு. 8. Paper, gold or silver leaf, மெல்லியதகடு. W. p. 498. PATTRA. 9. A dagger, cimeter, உடைவாள். 1. One of the postures of the silent de votee, as பத்திராசனம். 11. Beauty, hand someness, grace, அழகு. 12. Hill, mountain. மலை. 13. One of the five parts of a crown, See முடியுறுப்பு. 14. ''(c.)'' Caution, care, circumspection, சாக்கிரதை. 15. Firmness, safety, secureness, validity, உறுதி; [''from Sa. B'hadra,'' auspicious, beautiful, right, &c.] பத்திரம். Take care, be careful. பத்திரமாய்ப்பார். Take good care.

Miron Winslow


pattiram,
n. patra.
1. Leaf;
இலை. பத்திரங்கொண் டருச்சித்தே (வெங்கைக்கோ. 120).

2. Palm leaf of a book;
புத்தகத்தினேடு. எதிர்போயேறும் பத்திரம் வென்றதாக (திருவாலவா. 38, 24).

3. Plate in the form of leaf;
இலைபோன்ற தகடு. பைம்பொற் பத்திரம் (பெருங். மகத. 5, 51).

4. A leaf-like ornament;
ஓர் ஆபரணம். வெண்கலப் பத்திரங்கட்டி விளையாடி (திவ். பெரியாழ். 1, 9, 5).

5. Written document, bond, deed, order;
சாஸனம்.

6. Letter, epistle, note, ola;
திருமுகம். பத்திரங் கொடுத்தொதுங்கிப் பத்திரன் பணிந்து நின்றான் (திருவாலவா. 55, 19).

7. Flower petal;
பூவிதழ். (W.)

8. Wing, feather, plumage;
இறகு. (பிங்.)

9. Arrow;
அம்பு. (பிங்.) துன்று பத்திர மாயிரம் வாசவன் றுரப்ப (குற்றா. தல. 14, 39).

10. Small sword;
சிறுவாள். (பிங்.) பத்திரம் புரை நாட்டம் (கம்பரா. ஊர்தே. 170).

pattiram,
n. bhadra.
1. Beauty, grace;
அழகு. (பிங்.)

2. Beautiful figures, as carved on a door;
அழகிய உருவம். பத்திரமணிந்த சித்திரக்கதவின் (பெருங். இலாவாண. 2, 66).

3. Caution, carefulness, circumspection;
கவனம். சாமான்களைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்.

4. Goodness;
நன்மை. (சூடா.) பத்திரக்கடிப்பு (சீவக. 2276).

5. Safety, security;
பாதுகாப்பு. பத்திரச் சிறைகளை விரிக்கும் பண்பினான் (கம்பரா. சடாயுவுயிர். 91).

6. Good state of health, welfate;
சௌக்கியம். ஊரில் எல்லாரும் பத்திரமா?

7. A kind of elephant;
யானைவகை. பத்திரப் பெயர்ப் பருத்தகைச் சிறுத்தகட் பாய்மதப் பரூஉப்பக டனையான் (பாரத. பதினெட்டாம். 31).

8. Hil, mountain;
மலை. (பிங்.) பத்திரத் தலையென (கம்பரா. கரன். 80).

9. A kind of moulding in a pedestal;
பீடத்திலுள்ள எழுதகவகை. நடுவு பத்திரம் உடைத்தாய் நின்ற பீடம் ஒன்று. (S. I. I. ii, 222).

10. See பத்திரவருடம். (சிவதரு. கோபுர. 53).
.

11. See பத்திராசனம். ஆதன நூற்றெட்டவை பதுமம் பத்திரம் (தத்துவப். 107).
.

12. See பத்திரலிங்கம். (சைவச. பொது. 127.)
.

13. Horse-stable;
குதிரைப் பந்தி. (அக. நி.)

DSAL


பத்திரம் - ஒப்புமை - Similar