Tamil Dictionary 🔍

துறை

thurai


இடம் ; நீர்த்துறை ; நியாயவழி ; பகுதி ; உபாயம் ; சபை கூடுமிடம் ; ஆறு ; வண்ணார்துறை ; கடல் ; கடற்றுறை ; நூல் ; வரலாறு ; அகமும் புறமும்பற்றிய பொருட்கூறு ; பாவினங்களில் ஒன்று ; அலுவலகத் துறை , இலாகா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடம்.அத்துறையமலனும் (ஞானா.48,2). 1. Place, location, situation, space, position; நியாயவழி. துறை திறம்பாமற் காக்கத் தோன்றினான். (கம்பரா.வாலி.74). (தொல். பொ. 56, உரை.) 2. Way, path, as of virtue or justice; பகுதி. வீரராயவர் புரிவதாண்மைத் துறையென லாயிற்றன்றே (கம்பரா. வாலி.82). 3. Branch; section, category; உபாயம். துறையறிந்து காரியம் நடத்துகிறான். 4. Method, means; கடற்றுறை. துறைவளர் நாட்டொடு (சீவக.1618). 5. Seaport, harbour, roadstead; கடல். துறைமுற்றிய துளங்கிருக்கை (மதுரைக் 85). 6. Sea; ஆறு. (திவா.) 7. [K. toṟe.] River; வண்ணானொலிக்கும் இடம். துறைச்செல்லா ளுரவராடை கொண்டொலிக்குநின் புலைத்தி (கலித் 72, 13). 8. Place where washermen wash clothes; நீர்த்துறை. தண்புனற் றுருத்தியுந் தாழ்பூந் துறைகளும் (மணி .1.65) 9. Ghat, bathing ghat; சபைகூடுமிடம். (W.) 10. Frequented place, place of meeting, rendezvous; சாஸ்திரம். மற்றைத் துறைகளின் முடியும் (கம்பரா.வாலி.132). 11. Branch of knowledge; science; அகமும் புறமும் பற்றிய தமிழ்ப்பொருட்கூறு. தீந்தமிழின் றுறைவாய் நுழைந்தனையோ (திருக்கோ.20). 12. Subject or theme,in akam and puṟam; ஓழுங்கு. வேதந் துறைசெய்தான் (குமர.பிர.சிதம்ப.செய்.13) 13. Proper arrangement; codification; பாவினத்தொன்று. (காரிகை, செய்.6, உரை.) 14. A minor variety of any of the four classes of verse, one of three pāviṉam, q.v.; இசைப்பாட்டு வகை. (பிங்.) 15. A kind of singing; வரலாறு. துறையெனக். கியாதெனச் சொல்லுசொல்லென்றான் (கம்பரா.மீட்சி.255). 16. History;

Tamil Lexicon


s. a harbour, a sea-port; 2. a ford in a river, a ferry, the place to go down into the tank, a ghaut; 3. way, path, வழி; 4. a frequented place, a rendezvous; 5. a branch of science; 6. any theme in love poetry, 7. a resource, a resort, a place of refuge, ஒதுங்குமிடம். துறையிலிருக்கிற கப்பல், a ship in the roadstead. துறைகாட்ட, to show a method. துறைகாண, to find a haven or harbour; 2. to find a way or means to do a thing. துறைகாரர், agents, accountants and other servants of a temple. துறைத்தோணி, a ferry boat. துறை நியாயம், laws of love poetry. துறைபிடிக்க, to touch at a port; to gain the haven. துறைபோ, to leave a port. துறைபோக, to acquire a thorough knowledge of a science. துறைப்பேச்சு, vernacular or vulgar language. துறைமாற, to mistake the proper course. துறைமுகம், a roadstead, the entrance to a port. துறைவல்லோர், the learned.

J.P. Fabricius Dictionary


tore தொறெ department, sector, sphere, branch; harbor

David W. McAlpin


, [tuṟai] ''s.'' Any passage to, into, or across water--as the entrance to a tank, pond or river, a ford or ferry; a watering place for cattle; a place for bathing or for washing clothes, நீர்த்துறை. 2. A sea-port, harbor, road-stead, இறங்குதுறை. 3. Way, path, thoroughfare, passage for men or beasts, வழி. 4. Frequented place, a place of meeting, a rendezvous, சபைகூடுமிடம். 5. Place, location, situation, space, posi tion, as ஆயத்துறை, வண்ணாரத்துறை, இடம். 6. A resource, resort, shelter, place of refuge, ஒதுங்குமிடம். ''(c.)'' 7. River, ஆறு. 8. One of the three-fold subdivisions of any of the four classes of verse, கலித்துறை. (See பாவினம்.) 9. A branch, scope or extent of science, நூற்றுறை. 1. Any theme in love poetry, அகப்பொருட்டுறை. ''(p.)''

Miron Winslow


tuṟai,
n. prob. id.
1. Place, location, situation, space, position;
இடம்.அத்துறையமலனும் (ஞானா.48,2).

2. Way, path, as of virtue or justice;
நியாயவழி. துறை திறம்பாமற் காக்கத் தோன்றினான். (கம்பரா.வாலி.74). (தொல். பொ. 56, உரை.)

3. Branch; section, category;
பகுதி. வீரராயவர் புரிவதாண்மைத் துறையென லாயிற்றன்றே (கம்பரா. வாலி.82).

4. Method, means;
உபாயம். துறையறிந்து காரியம் நடத்துகிறான்.

5. Seaport, harbour, roadstead;
கடற்றுறை. துறைவளர் நாட்டொடு (சீவக.1618).

6. Sea;
கடல். துறைமுற்றிய துளங்கிருக்கை (மதுரைக் 85).

7. [K. toṟe.] River;
ஆறு. (திவா.)

8. Place where washermen wash clothes;
வண்ணானொலிக்கும் இடம். துறைச்செல்லா ளுரவராடை கொண்டொலிக்குநின் புலைத்தி (கலித் 72, 13).

9. Ghat, bathing ghat;
நீர்த்துறை. தண்புனற் றுருத்தியுந் தாழ்பூந் துறைகளும் (மணி .1.65)

10. Frequented place, place of meeting, rendezvous;
சபைகூடுமிடம். (W.)

11. Branch of knowledge; science;
சாஸ்திரம். மற்றைத் துறைகளின் முடியும் (கம்பரா.வாலி.132).

12. Subject or theme,in akam and puṟam;
அகமும் புறமும் பற்றிய தமிழ்ப்பொருட்கூறு. தீந்தமிழின் றுறைவாய் நுழைந்தனையோ (திருக்கோ.20).

13. Proper arrangement; codification;
ஓழுங்கு. வேதந் துறைசெய்தான் (குமர.பிர.சிதம்ப.செய்.13)

14. A minor variety of any of the four classes of verse, one of three pāviṉam, q.v.;
பாவினத்தொன்று. (காரிகை, செய்.6, உரை.)

15. A kind of singing;
இசைப்பாட்டு வகை. (பிங்.)

16. History;
வரலாறு. துறையெனக். கியாதெனச் சொல்லுசொல்லென்றான் (கம்பரா.மீட்சி.255).

DSAL


துறை - ஒப்புமை - Similar