Tamil Dictionary 🔍

திறம்

thiram


கூறுபாடு ; வகை ; சார்பு ; மிகுதி ; கூட்டம் ; நிலைபெறுதல் ; வலிமை ; திறமை ; மேன்மை ; கற்பு ; நேர்மை மருத்துவத்தொழில் ; வழி ; வரலாறு ; குலம் ; ஒழுக்கம் ; கூட்டம் ; ஆடு 80 , பசு 80 , எருமை 80 கூடின கூற்றம் ; கோட்பாடு ; விரகு ; உபாயம் ; ஐந்து சுரமுள்ள இசை ; பாதி ; உடம்பு ; வேடம் ; இயல்பு ; செய்தி ; காரணம் ; பேறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழி. அறனொடு புணர்ந்த திறனறி செங்கோல் (பொருந. 230). 6. Way, path, manner; வரலாறு. ஆபுத்திரன்றிறம் (மணி. 12, 27). 7. History; குலம். கருங்கண்ணி திறத்து வேறாக் கட்டுரை பயிற்றுகின்றான் (சீவக. 548). 8. Family; சுற்றம். புனைகடி மாலைமாதர் திறத்திது மொழிந்துவிட்டார் (சீவக. 2071). 9. Relations; உடம்பு. உயிர்திறம் பெயர்ப்பான்போல் (கலித். 100). 10. Body; வேடம். தவத்திறம் பூண்டு தருமங்கேட்டு (மணி. பதி. 93). 11. Garb, costume; கோட்பாடு. சமயக்கணக்கர் தந்திறங்கேட்டதும் (மணி. பதி. 88). 12. Doctrine; இயல்பு. உன்றிற மறிந்தேன் (மணி. 4, 96). 13. Quality, state, nature; விஷயம். பதைக்கின்ற மாதின் றிறத்தறி யேன்செயற் பாலதுவே (திவ். இயற். திருவிருத். 34). 14. Matter, affair, case; செய்தி. அத்திறங் கேட்ட தோழி (காஞ்சிப்பு. வாணீச. 27). 15. News, information; உபாயம். உய்திற மில்லை (கம்பரா. திருவவ. 17). 16. Means, method; காரணம். (சூடா.) 17. Cause, reason; பாக்கியம். திருவுறப் பயந்தன டிறங்கொள் கோசலை (கம்பரா. திருவவ. 104). 18. Opulence, wealth, fortune; மிகுதி. திறமாகக் கொடுத்தான். 19. Fullness, plenteousness; கூட்டம். திறங்களாகி யெங்குஞ் செய்களூடுழல் புள்ளினங்காள் (திவ். திருவாய். 6, 1, 3). 20. Multitude, crowd; ஆடு 80, பசு 80, எருமை 80 கூடின கூட்டம். (கணக்கதி. 19). 21. A herd of 80 sheep, 80 cows and 80 buffaloes; மருத்துவத்தொழில். (w.) 22. Midwifery; நிலைபேறு. (பிங்.) 1. Firmness, stability; வலிமை. திறமிருக்கும் புயத்தில் (அரிச். பு. நகர. 15). 2. Strength, power; சாமர்த்தியம். Colloq. 3. Ability, cleverness, dexterity; மேன்மை. சோதி திறம்பாடி (திருவாச. 7, 14). 4. Goodness, excellence; கற்பு. தீதிலா வடமீனின் றிறமிவ டிறமென்றும் (சிலப். மங்கல. 27). 5. Chastity; ஒழுக்கம். திறத்துளி வாழ்துமென்பார் (ஆசாரக். 89). 6. Moral conduct; established order; நேர்மை. திறத்துழி யன்றி வஞ்சித் தெய்துதல் (கம்பரா. மாரீச. 206). 7. Uprightness; கூறுபாடு. நிற்றிறஞ் சிறக்க (புறநா. 6). 1. Constituents, component parts, necessary elements; வகை. முத்திற வுணர்வால் (தணிகைப்பு. நந்தியு. 120). 2. [K. teṟa.] Kind, class, sort; சார்பு. ஒருகிற மொல் காத நேர்கோல் (கலித். 42). 3. Party, side; ஐந்துசுரமுள்ள இசை. (சிலப். 4, 106, உரை.) 4. (Mus.) A secondary melody-type, pentatonic; பாதி. (தைலவ. தைல.) 5. Half;

Tamil Lexicon


s. same as திறமை; 2. class, sort, வகை; 3. quality, nature, தன்மை; 4. party, side, பக்கம்; 5. cause, கார ணம்; 6. a kind of guitar with less than 7. strings. அதற்கிது திறம், this is superior to that. திறங்காட்ட, திறமைகாட்ட, to display ability. திறங்கெட்டவன், திறங்கெட்ட, மூளி, an incompetent person. திறப்படுத்த, to improve, to strengthen. திறப்பிக்க, to make firm, to consolidate. திறமான சாப்பாடு, a splendid dinner. திறவான், திறவாளி, an able person. இருதிறத்தாரும், both parties. கல்வித்திறம், profound knowledge. திறனில்யாழ், a lute used in maritime tracts, நெய்தல் யாழ்த்திறம்.

J.P. Fabricius Dictionary


, [tiṟm] ''s.'' (''a change of'' திரம்.) A kind, class. sort, division, வகை. 2. Quality, state, na ture, தன்மை. 3. Party, side in a law-suit or combat, பக்கம். 4. Strength, vigor, power, force, வலிமை. 5. Robustness, hardiness, compactness, soundness, உறுதி. 6. Ability, competence, cleverness, dexterity, சாமர்த்தி யம். 7. Goodness, excellence, eminence, richness, superfineness, மேன்மை. 8. Opu lence, wealth, good circumstance, ஐசுவரியம். ''(c.)'' 9. Largeness of wages, dowry, &c., அதிகம். 1. A kind of guitar with less than seven strings, குறைநரம்புள்ளவீணை. 11. Cause, as distinguished from effect, கார ணம். 12. ''[prov.]'' Midwifery, மருத்துவம். இதற்கதுதிறம். This is preferable to that. பலதிறமுஞ்சொன்னார்கள். They advised him many times. எத்திறத்து. In what respect? (நீதிநெறி.)

Miron Winslow


tiṟam,
n. perh. id.
1. Constituents, component parts, necessary elements;
கூறுபாடு. நிற்றிறஞ் சிறக்க (புறநா. 6).

2. [K. teṟa.] Kind, class, sort;
வகை. முத்திற வுணர்வால் (தணிகைப்பு. நந்தியு. 120).

3. Party, side;
சார்பு. ஒருகிற மொல் காத நேர்கோல் (கலித். 42).

4. (Mus.) A secondary melody-type, pentatonic;
ஐந்துசுரமுள்ள இசை. (சிலப். 4, 106, உரை.)

5. Half;
பாதி. (தைலவ. தைல.)

6. Way, path, manner;
வழி. அறனொடு புணர்ந்த திறனறி செங்கோல் (பொருந. 230).

7. History;
வரலாறு. ஆபுத்திரன்றிறம் (மணி. 12, 27).

8. Family;
குலம். கருங்கண்ணி திறத்து வேறாக் கட்டுரை பயிற்றுகின்றான் (சீவக. 548).

9. Relations;
சுற்றம். புனைகடி மாலைமாதர் திறத்திது மொழிந்துவிட்டார் (சீவக. 2071).

10. Body;
உடம்பு. உயிர்திறம் பெயர்ப்பான்போல் (கலித். 100).

11. Garb, costume;
வேடம். தவத்திறம் பூண்டு தருமங்கேட்டு (மணி. பதி. 93).

12. Doctrine;
கோட்பாடு. சமயக்கணக்கர் தந்திறங்கேட்டதும் (மணி. பதி. 88).

13. Quality, state, nature;
இயல்பு. உன்றிற மறிந்தேன் (மணி. 4, 96).

14. Matter, affair, case;
விஷயம். பதைக்கின்ற மாதின் றிறத்தறி யேன்செயற் பாலதுவே (திவ். இயற். திருவிருத். 34).

15. News, information;
செய்தி. அத்திறங் கேட்ட தோழி (காஞ்சிப்பு. வாணீச. 27).

16. Means, method;
உபாயம். உய்திற மில்லை (கம்பரா. திருவவ. 17).

17. Cause, reason;
காரணம். (சூடா.)

18. Opulence, wealth, fortune;
பாக்கியம். திருவுறப் பயந்தன டிறங்கொள் கோசலை (கம்பரா. திருவவ. 104).

19. Fullness, plenteousness;
மிகுதி. திறமாகக் கொடுத்தான்.

20. Multitude, crowd;
கூட்டம். திறங்களாகி யெங்குஞ் செய்களூடுழல் புள்ளினங்காள் (திவ். திருவாய். 6, 1, 3).

21. A herd of 80 sheep, 80 cows and 80 buffaloes;
ஆடு 80, பசு 80, எருமை 80 கூடின கூட்டம். (கணக்கதி. 19).

22. Midwifery;
மருத்துவத்தொழில். (w.)

tiṟam,
n. sthira.
1. Firmness, stability;
நிலைபேறு. (பிங்.)

2. Strength, power;
வலிமை. திறமிருக்கும் புயத்தில் (அரிச். பு. நகர. 15).

3. Ability, cleverness, dexterity;
சாமர்த்தியம். Colloq.

4. Goodness, excellence;
மேன்மை. சோதி திறம்பாடி (திருவாச. 7, 14).

5. Chastity;
கற்பு. தீதிலா வடமீனின் றிறமிவ டிறமென்றும் (சிலப். மங்கல. 27).

6. Moral conduct; established order;
ஒழுக்கம். திறத்துளி வாழ்துமென்பார் (ஆசாரக். 89).

7. Uprightness;
நேர்மை. திறத்துழி யன்றி வஞ்சித் தெய்துதல் (கம்பரா. மாரீச. 206).

DSAL


திறம் - ஒப்புமை - Similar