Tamil Dictionary 🔍

தழிஞ்சி

thalinji


தாக்குண்ட படைவீரரை முகமன் கூறியும் பொருள் கொடுத்தும் அரசன் தழுவிக் கோடலைக் கூறும் புறத்துறை ; தோற்றவர் மேல் ஆயுதஞ் செலுத்தாத மறப்பண்பினைக் கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போரில் ஆயுதங்களால் தாக்குண்டு கேடுற்ற தன் படையாளரை முகமன் கூறியும் பொருள்கொடுத்தும் அரசன் தழுவிக்கோடலைக் கூறும் புறத்துறை. அழிபடைதட்டோர் தழிஞ்சியொடு தொகைஇ (தொல். பொ. 63). 1. (Puṟap.) Theme describing the honour and presents offered by the king to the soldiers maimed in battle; ஒரு வீரன் தனக்குத் தோற்றோடுவோர்மேற் படையெடாத மறப்பண்பினைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 3, 20.) 2. (Puṟap.) Theme describing the valour of a warrior who does not pursue and destroy and routed adversary in full retreat; பகைவர்சேனை தம் எல்லையிற் புகுதாதபடி அரியவழியைக் காத்தலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 4,3.) 3. (Puṟap.) Theme describing the guarding of a narrow passage through which an enemy might enter;

Tamil Lexicon


s. non-pursuance of a routed fleeing army.

J.P. Fabricius Dictionary


, [tẕiñci] ''s.'' Non-pursuance, of a routed, fleeing army, சாய்ந்தார்மேற்படாமை. (சது.)

Miron Winslow


taḻinjci,
n. தழிஞ்சு-இ
1. (Puṟap.) Theme describing the honour and presents offered by the king to the soldiers maimed in battle;
போரில் ஆயுதங்களால் தாக்குண்டு கேடுற்ற தன் படையாளரை முகமன் கூறியும் பொருள்கொடுத்தும் அரசன் தழுவிக்கோடலைக் கூறும் புறத்துறை. அழிபடைதட்டோர் தழிஞ்சியொடு தொகைஇ (தொல். பொ. 63).

2. (Puṟap.) Theme describing the valour of a warrior who does not pursue and destroy and routed adversary in full retreat;
ஒரு வீரன் தனக்குத் தோற்றோடுவோர்மேற் படையெடாத மறப்பண்பினைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 3, 20.)

3. (Puṟap.) Theme describing the guarding of a narrow passage through which an enemy might enter;
பகைவர்சேனை தம் எல்லையிற் புகுதாதபடி அரியவழியைக் காத்தலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 4,3.)

DSAL


தழிஞ்சி - ஒப்புமை - Similar