தொழில்
tholil
செயல் ; அலுவல் ; தந்திரம் ; பெருமை ; வினைச்சொல் ; ஏவல் ; திறமை ; களவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருமை. (அக. நி.) 13. Greatness; செயல். பிறிதுதொழிலறியா வாகலின் (புறநா. 14). 1. Act, action, deed, work; உபயோகிக்கும் முறை. அவற்றது தொழிலுந்தோன்றவே (சீவக. 1217). 11. Method of using; களவு. (அக. நி.) 12. Theft; தந்திரம், நீ என்னிடத்தில் தொழில் பண்ணாதே. 10. Treachery, intrigue, cunning; வேலை. 9. Occupation, work; வினைச்சொல். பெயருந் தொழிலும் பிரிந்தொருங்கிசைப்ப (தொல். எழுத். 132). 8. (Gram.) Verb; படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று ஈச்சுரகிருத்தியம். தோற்றுவித் தளித்துப் பின்னுந் துடைத்தரு டொழில் கண் மூன்றும் (சி. சி. 1, 33). 7. Threefold functions of god, Viz., paṭaittal, kāttal, aḻittal; கருமபூமிக்கு உரிய உழவு, தொழில், வரைவு, வாணியம், விச்சை, சிற்பம் என்ற அறுவகைப் பட்ட செயல். (திவா.) 6. Occupations pertaining to karuma-pūmi, six in number, viz., uḻavu, toḻil, varaivu, vāṇipam, viccai, ciṟpam; வேலைத் திறமை. 5. Workmanship; ஏவல். தொன்றுமொழிந்து தொழில்கேட்ப (மதுரைக் 72). 4. Order, command; . 3. See கிரியா சக்தி. பரையாதி நசையறிவு தொழிலைந்தும் வாயிலா (சேதுபு. சேதுபல. 56). உத்தியோகம். Colloq. 2. Office, calling, profession;
Tamil Lexicon
s. action, work, வேலை; 2. occupation, office, employ, workmanship, trade, business, உத்தியோ கம்; 3. skill, competence, சாமர்த்தி யம்; 4. treachery, intrigue, தந்திரம்; 5. appropriate duties or occupations, குலாசாரம்; 6. (in gr.) a verb, வினை. தொழிலாளி, தொழிலாளன், தொழி லோன், workman, an artificer. தொழில் செய்ய, -பண்ண, to work, to pursue a trade, to enter upon a work. தொழில்துறை, trade, business (தொ ழிற் துறை). தொழில்துறை பண்ண, to carry on trade or business (தொழிற்றுறை பண்ண). தொழில்பாடு, labour (தொழிற்பாடு). தொழிற்பெயர், a verbal noun. தொழில் முறைமை, occupation, manner of work (தொழின் முறைமை). தொழில்மொழி, a verb (தொழின் மொழி). நீசத்தொழில், a mean action.
J.P. Fabricius Dictionary
செயல்.
Na Kadirvelu Pillai Dictionary
1. veele வேலெ 2. toRilu தொழிலு 1. action; work, occupation, profession 2. industry
David W. McAlpin
, [toẕil] ''s.'' Act, action, deed, செயல். 2. Work, service, employment, avocation, art, pursuit, practice, வேலை. 3. Office, trade, function, business, உத்தியோகம். 4. Skill, competence, address in performance, adroitness, exercise of acumen, display of ingenuity in workmanship, machinery, or speech, சாமர்த்தியம். 5. ''[in gram.]'' A verb, வினைச்சொல். 6. Result, natural effect, characteristic, instinct, தன்மை. 7. Ap propriate duties or occupations, குலாசாரம். 8. Treachery, intrigue, cunning, தந்திரம்- ''Note'' For முத்தொழில், the three operations of the deity and ஐந்தொழில், as given in Saiva Agamas, see பஞ்சகிருத்தியம் under கிருத்தியம். The six தொழில், or actions, appropriate to the holy land, or India proper, are: 1. உழவு. ploughing, tillage. 2. தொழில், work manship, manufacture. 3. வரைவு, marri age, with appropriate ceremonies. 4. வா ணிகம், traffic. 5. வீச்சை, வித்தை. arts, science, literature. 6. சிற்பம். architecture. The six தொழில் or duties and occupations appropriate to the four castes are: 1. To அந்தணர், brahmans: 1. ஓதல், study and reci tation of the Vedas. 2. ஓதுவித்தல், teaching the Veda. 3. வேட்டல், performing daily and special rites tending the sacred fire. &c. 4. வேட்பித்தல், managing the performance of rites for others, &c. 5. ஈதல், distributing alms, supporting religi ous mendicants. 6. ஏற்றல், receiving alms, and donations from worthy persons. II. To அரசர், the royal or military race: 1. ஓதல், studying. 2. வேட்டல், performing rites. 3. ஈதல், bestowing alms, and donations. 4. உலகோம்பல், cherishing, protecting, govern ing the land. 5. படைப்பயிற்றல், training or disciplining armies. 6. பொருதல், carrying on war. III. To வைசியர், or cultivators, marchants and herdsmen: 1. ஓதல், study, 2. வேட்டல், performing rites. 3. பொருளீட் டல், acquiring wealth. 4. ஈதல், bestowing alms. 5. பசுக்காத்தல், keeping cows. 6. ஏரு ழல், agriculture. IV. சூத்திரர், servile castes: 1. முதன்மூவர்க்கேவல்செய்தல், serving the first three castes. 2. பொருளீட்டல், acquiring wealth. 3. உழுதல், tillage. 4. பசுக்காத்தல், keeping cows. 5. குயிலூவத்தொழில்செய்தல், playind on stringed and wind instruments 6. காருகவினைகளாக்கல், weaving cotton and silk, bearing burdens, and other drudgery. Authorities differ on some of the varieties. நீஎன்னிடத்தில்தொழில்பண்ணிக்கொண்டுவருகி றாய்ஒருநாளைக்குஅகப்படுவாய். You are dealing slily with me, one day you will be caught.
Miron Winslow
toḻil,
n. perh. தொழு-. [M. toḻil.]
1. Act, action, deed, work;
செயல். பிறிதுதொழிலறியா வாகலின் (புறநா. 14).
2. Office, calling, profession;
உத்தியோகம். Colloq.
3. See கிரியா சக்தி. பரையாதி நசையறிவு தொழிலைந்தும் வாயிலா (சேதுபு. சேதுபல. 56).
.
4. Order, command;
ஏவல். தொன்றுமொழிந்து தொழில்கேட்ப (மதுரைக் 72).
5. Workmanship;
வேலைத் திறமை.
6. Occupations pertaining to karuma-pūmi, six in number, viz., uḻavu, toḻil, varaivu, vāṇipam, viccai, ciṟpam;
கருமபூமிக்கு உரிய உழவு, தொழில், வரைவு, வாணியம், விச்சை, சிற்பம் என்ற அறுவகைப் பட்ட செயல். (திவா.)
7. Threefold functions of god, Viz., paṭaittal, kāttal, aḻittal;
படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று ஈச்சுரகிருத்தியம். தோற்றுவித் தளித்துப் பின்னுந் துடைத்தரு டொழில் கண் மூன்றும் (சி. சி. 1, 33).
8. (Gram.) Verb;
வினைச்சொல். பெயருந் தொழிலும் பிரிந்தொருங்கிசைப்ப (தொல். எழுத். 132).
9. Occupation, work;
வேலை.
10. Treachery, intrigue, cunning;
தந்திரம், நீ என்னிடத்தில் தொழில் பண்ணாதே.
11. Method of using;
உபயோகிக்கும் முறை. அவற்றது தொழிலுந்தோன்றவே (சீவக. 1217).
12. Theft;
களவு. (அக. நி.)
13. Greatness;
பெருமை. (அக. நி.)
DSAL