Tamil Dictionary 🔍

ஆட்டம்

aattam


அசைவு ; அலைவு ; சஞ்சாரம் ; விளையாட்டு ; விளையாட்டில் தொடங்குமுறை ; கூத்தாட்டு ; சூது ; அதிகாரம் ; ஓர் உவம உருபு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சஞ்சாரம். அஞ்சனமேனியை யாட்டங்காணேன் (திவ். திருவாய். 10, 3, 3).; முகம் குரங்காட்டமிருக்கிறது. 7. Moving about, going here and there; See ஆட்டமாய். சூது. ஆர்க்குத் தெரியுமவளாட்டமெலாம் (தெய்வச். விறலிவிடு. 423). 2. Fraud; அசைகை. 1. Shakiness; அதிகாரம். ஊர்முழுதும் அந்த அதிகாரியின் ஆட்டமாயிருக்கிறது. 6. Influence, power; அங்கே போகவேண்டுமென்று என்ன ஆட்டம் ஆடினான். 5. Behaving like one possessed; கூத்தாட்டு. அங்கே ஆட்டமும் பாட்டமுமாயிருக்கிறது. 4. Dance, dancing; விளையாட்டில் தொடங்குமுறை. 3. One's turn in a game; விளையாட்டு. தவப்பகடி யாட்டாங்காண் (ஒழிவி. யோக. 4). 2. Play, sport, game; அசைவு. 1. Motion, vibration, rocking, swinging, rolling, pitching, as of a ship;

Tamil Lexicon


s. (ஆடு V) shaking, dancing, அசைவு; 2. a play, game, விளையாட்டு; 3. likeness, like, சாயல். இரண்டாட்டம் கெலித்தான், he won two games. உன் ஆட்டம் இம்மட்டோ, canst thou do no more than that? வெறியனாட்டமாய், like one that is drunk or mad. இவன் தகப்பன் ஆட்டம் இருக்கிறான், he is like his father. குதிரையாட்டமாய் ஓடு, run like a horse. குருட்டாட்டம், முகமாட்டம், கொண் டாட்டம், முரட்டாட்டம், & other compounds.

J.P. Fabricius Dictionary


, ''v. noun.'' Motion, vibration, agitation, vacillation, rocking, swing ing, rolling or pitching (at sea, &c.), அசைவு. 2. Dance, play, game, prank, an act of play, a turn-about, a turn, once playing the game, விளையாட்டு. 3. Likeness, the assumption of a character, profession, conduct, shape in imitation, தன்மை. 4. Moving about, energy, vigor, action, முயற்சி. ''(c.)'' அங்கேபோக ஆட்டமாடுகிறான். He insists on going there, (contrary to advice.) இந்த ஆட்டத்துக்கெல்லாமவனசையான். He will not be moved by this agitation. அவன் ஆட்டந்தீர்ந்தது. He power, bustle, agitation, harassing, &c. has come to an end. அவனிரண்டாட்டம் விளையாடினான் ஓராட்டந் தோற்றுப்போனான். He played two games and lost one of them.

Miron Winslow


āṭṭam
n. ஆடு-. [T. K. Tu. āṭṭa, M. āṭṭam.]
1. Motion, vibration, rocking, swinging, rolling, pitching, as of a ship;
அசைவு.

2. Play, sport, game;
விளையாட்டு. தவப்பகடி யாட்டாங்காண் (ஒழிவி. யோக. 4).

3. One's turn in a game;
விளையாட்டில் தொடங்குமுறை.

4. Dance, dancing;
கூத்தாட்டு. அங்கே ஆட்டமும் பாட்டமுமாயிருக்கிறது.

5. Behaving like one possessed;
அங்கே போகவேண்டுமென்று என்ன ஆட்டம் ஆடினான்.

6. Influence, power;
அதிகாரம். ஊர்முழுதும் அந்த அதிகாரியின் ஆட்டமாயிருக்கிறது.

7. Moving about, going here and there; See ஆட்டமாய்.
சஞ்சாரம். அஞ்சனமேனியை யாட்டங்காணேன் (திவ். திருவாய். 10, 3, 3).; முகம் குரங்காட்டமிருக்கிறது.

āṭṭam
n. ஆடு-.
1. Shakiness;
அசைகை.

2. Fraud;
சூது. ஆர்க்குத் தெரியுமவளாட்டமெலாம் (தெய்வச். விறலிவிடு. 423).

DSAL


ஆட்டம் - ஒப்புமை - Similar